அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: ஒரு காலத்தில் குஜராத்தின் இளம் அரசியல் தலைவராக.. விடிவெள்ளியாக.. மாற்றத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டவர் ஹர்திக் பட்டேல். ஆனால் அதே ஹர்திக் பட்டேல் இப்போது குஜராத்தில் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறார்.

2015ல் குஜராத்தில் பட்டேல் ஜாதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தை, பட்டேல் குழுவில் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார்.

Why Hardik Patel BJP MLA did not get limelight in Gujarat Lok Sabha elections 2024

இந்த போராட்டத்திற்கு பின் இவர் பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்தார். தனி நபராக செயலாற்றி வந்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இவர் 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2015 குஜராத் கலவர வழக்கில் இவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் ஹர்திக் பட்டேல் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் விஸ்நகரில் இருந்த பாஜக கட்சியின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

இதில் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் அவரின் சிறை தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் அவர் குற்றம் செய்தவர்தான் என்று நீதிமன்றம் கூறியது. இவர் குற்றம் செய்தவர் என்பதால் தற்போது 2019 தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

இவரை காங்கிரஸ் தங்கம் போல பார்த்துக்கொண்டது. 26 வயதிலேயே இவர் குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஆனார். இவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஹெலிகாப்டர்களை கூட காங்கிரஸ் கட்சி அனுப்பி வைத்தது. அந்த அளவிற்கு இவருக்கு பெரிய மரியாதை கொடுக்கப்பட்டது.

பாஜகவில் ஐக்கியம்: அமித் ஷா ஒரு ஜெனரல் டயர்.. பாஜக எனக்கு 1200 கோடி ரூபாய் கொடுத்து இழுக்க பார்க்கிறது என்று கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலின் போது கூறியவர் ஹர்திக் பட்டேல். பாஜகவை தீவிரமாக எதிர்த்து வந்த அதே ஹர்திக் பட்டேல் 2022ல் பாஜகவில் ஐக்கியம் ஆனார் .

இவரின் "அந்த" மாதிரி வீடியோக்களை பகிர்ந்து அப்போது ஹர்திக் எல்லாம் தலைவரா என்று கிண்டலடித்துக்கொண்டு இருந்த அதே பாஜக.. எங்கள் கட்சியில் பட்டிதார் ரத்தம் சேர்ந்து விட்டது என்று ஹர்திக் வருகையை பாஜக கொண்டாடியது.

குஜராத்தில் பட்டிதார் இனப்பிரிவு இல்லாமல் வெற்றிபெற முடியாது. அதிலும் அங்கு கடந்த 5 முதல்வர்களை பட்டிதார் இனப்பிரிவு மக்களே தேர்வுசெய்துள்ளனர். ஆம்.. பட்டிதார் இன மக்கள்தான் அங்கு தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தி. பாஜக குஜராத்தை கோட்டையாக வைத்து இருப்பதும் அப்படித்தான். அங்கு கடந்த 5 முதல்வர்களின் 4 முதல்வர்கள் பட்டிதார் உட்பிரிவான Leuva பட்டேல் இனப்பிரிவை சேர்ந்தவர்கள். மொத்தமாக உள்ள 182 சட்டசபை இடங்களில் 60 இடங்களில் வெற்றியை இவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.

காங்கிரஸ் நிலைமை; இதனால்தான் அங்கு பட்டிதார் தலைவர் ஹர்திக் பட்டேலை பாஜக வளைத்து உள்ளது. ஒரு காலத்தில் குஜராத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக இருந்தது. அங்கு பட்டிதார் ஆதரவு காங்கிரஸ் வசம்தான் இருந்தது. 30 வருடங்களுக்கு முன் அங்கு காங்கிரஸ் முதல்வர் மாதவ் சிங் பட்டிதார் இன மக்களை புறக்கணித்துவிட்டு சாத்திரிய - அரிஜன - முஸ்லீம் - ஆதிவாசி உருவாக்கினார். இதனால் காங்கிரஸ் அங்கு பட்டேல் இன மக்கள் ஆதரவை இழந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு அங்கு பாஜக வளர்ந்து, பட்டிதார் உதவியுடன் தொடர்ந்து ஆட்சியிலும் இருந்து வருகிறது.

இதனால்தான் ஹர்திக் பட்டேலை கட்சியில் இணைத்து காங்கிரஸ் தொடர்ந்து அவருக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால் பல்வேறு வழக்குகள் உள்ளிட்ட பிரஷர்கள் காரணமாக வேறு வழியின்றி ஹர்திக் பட்டேல் பாஜகவில் இணைந்தார்.

ஆனால் பாஜகவில் இணைந்த அவருக்கு கடந்த சட்டசபை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டு எம்எல்ஏ ஆனவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. எம்எல்ஏவாக இருக்கும் அவர் அப்படியே ஓரம்கட்டப்பட்டு வருகிறார். இப்போது லோக்சபா தேர்தலில் ஸ்டார் பிரச்சார நிர்வாகிகள் பட்டியலில் நீக்கப்பட்டு உள்ளார். அவர் தொகுதியில் நடக்கும் பிரச்சாரத்தில் கூட அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை.

காங்கிரஸ் காலத்தில் ஹெலிகாப்டரில் எல்லாம் போனவருக்கு பிரச்சாரத்திற்கு கூப்பிட ஆள் இல்லை. ஒரு காலத்தில் ராஜா மாதிரி தோரணையாக இருந்தவர்.. இப்போது எம்எல்ஏவாக இருந்தும் கூட கட்சி ஆதரவு இன்றி ஓரம்கட்டப்பட்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+