மகாபிரபுவின் பக்தியால்.. டிரம்ப் அழைப்பை நிராகரித்தேன்! அமெரிக்கா செல்லாதது ஏன்? மோடி விளக்கம்
புவனேஸ்வர்: கனடாவில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு வரும்படி அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைத்தார். ஆனால் மோடி அதனை நிராகரித்தார். இந்நிலையில் தான் அதிபர் டிரம்பின் அழைப்பை நிராகரித்தது ஏன்? என்பது பற்றி பிரதமர் மோடி ஒடிசா பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசாவில் உள்ளார். ஒடிசாவில், தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. கடந்த 2024 ஜூன் மாதம் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக ஆட்சி அமைந்த பிறகு 6வது முறையாக இன்று பிரதமர் மோடி ஒடிசாவுக்கு சென்றார்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும் ஜனதா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ரூ.18,600 கோடி மதிப்பிலான 105 வளர்ச்சி திட்ட பணிகளை மோடி தொடங்கி வைத்தார். அதன்பிறகு பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார்.
அப்போது கனடாவின் ஜி 7 மாநாட்டுக்கு சென்றபோது டொனால்ட் டிரம்ப் தன்னை அமெரிக்காவுக்கு அழைத்ததையும், அதனை அவர் நிராகரித்தது ஏன்? என்பது பற்றியும் பிரதமர் மோடி விளக்கினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி, ‛‛2 நாட்களுக்கு முன்புதான் நான் ஜி 7 உச்சி மாநாட்டிற்காக கனடாவிற்கு சென்றிருந்தேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னை அழைத்தார். கனடா வந்திருப்பதால் வாஷிங்டன் (அமெரிக்கா) வழியாக செல்லுங்கள். நாம் ஒன்றாக டின்னர் சாப்பிட்டு கொண்டே பேசுவோம் என்று கூறினார். இந்த அழைப்பை மிகுந்த வற்புறுத்தலுடன் முன்வைத்தார்.
நான் அமெரிக்க அதிபரின் அழைப்பை மறுத்தேன். அழைப்பிற்கு நன்றி என்று சொன்னேன். மகாபிரபுவின் தேசத்திற்கு (ஒடிசா) செல்வது எனக்கு மிகவும் முக்கியம் என்பதால் நான் அவரது அழைப்பை பணிவுடன் நிராகரித்தேன். மகாபிரபு மீதான உங்கள் அன்பும் பக்தியும் என்னை இந்த மண்ணுக்குக் கொண்டு வந்தது'' என்று கூறினார். இதனை கேட்டவுடன் கூட்டத்தில் இருந்தவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். ஒடிசா மக்கள் கடவுள் பூரி ஜெகநாதரை தெய்வமாக வணங்கி வருகின்றனர். இந்த பூரி ஜெகநாதரை தான் பிரதமர் மோடி, மகாபிரபு என தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு கடந்த 15ம் தேதி காலையில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். முதலில் அவர் இஸ்ரேல் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்து இருக்கும் தீவு நாடான சைப்ரஸ் நாட்டுக்கு சென்றார்.
அதன்பிறகு அங்கிருந்து கனடா புறப்பட்டு சென்றார். கனடாவில் நடக்கும் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார்.
அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால் இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக டிரம்ப் ஜி 7 மாநாட்டில் இருந்து அவசரமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் இருந்த டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியுடன் 35 நிமிடங்கள் பேசினார். அப்போது தான் கனடா வரை வந்துவிட்டீர்கள். பக்கத்தில் உள்ள அமெரிக்கா வந்தால் டின்னர் சாப்பிட்டு கொண்டே பேசலாம் என்று டிரம்ப் அழைத்தார். ஆனால் பிரதமர் மோடி அந்த அழைப்பை மறுத்து திட்டமிட்டப்படி கனடாவில் இருந்து குரேஷியா சென்றார். இந்நிலையில் தான் அதிபர் டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தது ஏன்? என்பது பற்றி பிரதமர் மோடி விளக்கி உள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications