அது ஏன் எப்பப் பார்த்தாலும் சுமோனாவின் உதட்டையே குறி வைக்கிறார் கபில் சர்மா??
மும்பை: இந்தக் கேள்வியை ரசிகர்கள் மட்டுமல்ல.. சுமோனாவுமே கேட்கிறார்.. சுமோனா யார் என்றால் கொஞ்சம் உங்களுக்கு இந்தி டிவியெல்லாம் பார்க்கும் பழக்கம் இருக்க வேண்டும்.
காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற கலக்கலான காமெடி நிகழ்ச்சியில் வரும் கபில் சர்மாவுடன், அவரது மனைவி வேடத்தில் நடிப்பவர்தான் சுமோனா. முழுப் பெயர் சுமோனா சக்கரவர்த்தி.
நிகழ்ச்சியின்போது சுமானோவை ஓவராகவே கலாய்ப்பார் கபில். அதுவும் அவரது உதடுகளை வைத்துத்தான் ஏகப்பட்ட கமெண்டுகள் விடுவார். இது பல நேரம் சர்ச்சையும் ஆகியுள்ளது. ஆனால் சுமோனா இதை சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை. கேஷுவலாகவே எடுத்துக் கொள்கிறார்.

எப்பப் பார்த்தாலும்
ஆனால் தான் சந்திக்கும் அனைவருமே ஏன் எப்போது பார்த்தாலும் உங்க உதடுகளை வைத்து உங்களைக் கலாய்க்கிறார் கபில் என்று கேட்கிறார்களாம். அதானே ஏன் அப்படி செய்கிறார் என்று நானும் பதில் கேள்வி கேட்டு நழுவி விடுகிறேன் என்று கூறுகிறார் சுமோனா.

காமெடி ராணி
28 வயதான சுமோனா காமெடியில் "கிங்கி".. அதாவது ராணி. வாயைத் திறந்தாலே காமெடி கொட்டித் தள்ளி விடும். கபில் சர்மாவும், இவரும் அடிக்கும் லூட்டிகள் ஏகப் பிரபலம். இரண்டு பேருக்குமே அப்படி ஒரு அலைவரிசை. கெமிஸ்ட்ரி.

எப்பப் பார்த்தாலும் அதே கேள்விதான்
இந்த நிகழ்ச்சி குறித்தும் கபில் சர்மா குறித்தும் சுமோனா கூறுகையில், பலரும் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, ஏன் கபில் உங்களது உதடுகளையே குறி வைக்கிறார் என்பதுதான்.

அழகிய உதடுகள்
எனக்கு மிக அழகான உதடுகள் உள்ளன என்பது உண்மைதான். ரசிகர்களும் அதையேதான் கூறுகிறார்கள். ஆனால் அதை ஏன் கபில் கேலி செய்கிறார் என்றுதான் பலரும் கவலைப்படுகிறார்கள்.

டிவி சீரியஸ்
மக்களுக்கு டிவி என்பது சீரியஸான ஒன்று. அதில் வருவதை அப்படியே நம்புகிறார்கள், அத்தோடு ஒன்றி விடுகிறார்கள். எனவேதான் அதில் நடப்பதைப் பார்த்துக் கவலைப்படுகிறார்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள்.

கபில் மனைவியா என்று கூட கேட்கிறார்கள்
நான் கபிலுடன் கலந்து கொண்டு பேசுவது, நடிப்பதைப் பார்த்து பலர் நாங்கள் நிஜமகாவே கணவர், மனைவி என்று கூட கருதுகிறார்கள். பலர் இதை என்னிடமே கூட கேட்டுள்ளனர். எனது பதில் அதற்கு வெறும் சிரிப்பு மட்டுமே என்று கூறுகிறார் சுமோனா.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications