ஜே.என்.யூ மாணவர்கள் மகிஷாசுரனை வழிபட்டு, மாட்டுக்கறி சாப்பிட்ட 'தேசத்துரோகிகள்': போலீஸ்
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாகவும், துர்க்கையம்மனுக்கு பதிலாக மகிஷாசுரனை வழிபட்டதாகவும், இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்ததாகவும் இந்த நடவடிக்கைகளின் உள்நோக்கத்தை வைத்து பார்க்கும்போது, அவர்கள் 'தேச விரோதிகள்' என்று டெல்லி போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 9ம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற அப்சல் குருவிற்கு ஆதரவான நிகழ்ச்சி குறித்து டெல்லி காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அதில் 2015ம் ஆண்டு அக்டோபர் 16ல் டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு ஜே.என்.யூ. துணைவேந்தர் எஸ்.கே.சோப்ராயை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவது பிரதானமாக விவாதிக்கபப்ட்டது.
மேலும், வளாகத்தினுள் மாணவர்கள் அடிக்கடி ஆர்பாட்டத்திலும் கோஷங்களிலும் ஈடுபடுவதும் விவாதிக்கப்பட்டது.
ஜனநாயக மாணவர் சங்கம், ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு என்ற இரண்டு அமைப்புகள் தேச விரோத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
சில சமயங்களில் இந்த அமைப்பினர் இந்துக் கடவுளர்களின் நிர்வாண படத்தை சுவர்களில் ஒட்டி உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளனர். அப்சல் குருவுக்கு துக்கம் அனுசரித்ததோடு, தாண்டேவாடாவில் இந்திய துணை ராணுவப்படையினர் பலியானதை கொண்டாடியுள்ளனர்.
துர்க்கைக்கு பதிலாக மகிஷாசுரனை கும்பிட்டு பிற இந்து மாணவர்களை சீண்டியுள்ளனர். மாட்டுக்கறி சாப்பிட்டுள்ளனர். சர்ச்சைக்குறிய எஸ்.ஏ.ஆர்.கிலானியை உரையாற்ற அழைத்துள்ளனர். இவ்வாறு டெல்லி போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications