நதிநீர் பிரச்சினை.. கர்நாடகாவில் நாளை பந்த்! பெங்களூரில் பஸ், ஆட்டோ ஓடாது, சினிமா காட்சிகள் ரத்து
பெங்களூர்: கலசா-பண்டூரி என்ற நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்த கோவா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதை கண்டித்து, கர்நாடகாவில் நாளை ஒருநாள் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன. இதற்கு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் உள்பட 1080 கூட்டமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் பல பகுதிகளிலும் நாளை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபி கடலில் கலக்கிறது மகதாயி (கோவாவில் மான்டோவி நதி என பெயர்) நதி. இதில் கலசா-பண்டூரி என கால்வாய்கள் அமைத்து, சுமார் 7.56 டிஎம்சி தண்ணீரை ஹூப்ளி, பெல்காம் போன்ற மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது கர்நாடகா. இதற்கு கோவா எதிர்ப்பு தெரிவிக்கிறது.

மத்திய அரசு கோவா பக்கம் ஆதரவாக உள்ளதாக கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே கோவா மற்றும் மத்திய அரசை கண்டித்து, செப்டம்பர் 26ம் தேதியான, நாளை கர்நாடகாவில் பந்த் நடத்த கன்னட ஆதரவு அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
இந்த பந்த்துக்கு 1080 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே பெங்களூர் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
*பெங்களூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் தானாக முன்வந்து விடுப்பு எடுக்க முடிவு செய்துள்ளதால் மாநகராட்சி பணிகள் முற்றிலும் ஸ்தம்பிக்கும்.
*பெங்களூர் மாநகர பஸ்கள், கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர்களும் போராட்டத்தில் குதிப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும்.
*பெங்களூர் நகரில் ஆட்டோக்கள் பெருமளவில் இயங்காது.
*பள்ளிக்கூட மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் இன்னும் விடுமுறை அறிவிக்கவில்லை என்றபோதிலும், சூழ்நிலையை பார்த்து நாளை விடுமுறை அறிவிக்க கூடும்.
*நாளை நாலாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதுவும் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு பாதிப்பாக அமையும்.
*சரக்கு போக்குவரத்தில் ஈடுபடும் லாரிகள் இயங்காது. எனவே சரக்கு சப்ளை பாதிக்கப்படும்.
*பெங்களூர்-தமிழக நகர்கள் நடுவேயான பஸ் போக்குவரத்து எல்லை நகரான ஒசூருடன் நிறுத்தப்பட உள்ளது.
*கர்நாடகாவிலுள்ள திரையரங்குகளில் பகல் முழுக்க சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட உள்ளன.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications