Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வடக்கே எடுபடாத தென் மாநில ஃபார்முலா.. கத்தையாக பணம் தருவதாக சொன்ன காங்கிரஸ்.. கண்டுக்காத ராஜஸ்தான்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: மகளிருக்கு மாதந்தோறும் நிதியுதவி அளிப்பதாக அளித்த வாக்குறுதியை தென்னிந்திய மக்கள் ஏற்றுக் கொண்ட நிலையில் , வட இந்திய மக்கள் அதனை ஏற்கவில்லை. இதனால் கர்நாடகா , தெலுங்கானாவை காங்கிரஸ் வென்ற நிலையில், ராஜஸ்தான, சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் அந்த வாக்குறுதிகள் எடுபடவில்லை என்றே தெரிகிறது.

ராஜஸ்தானில் இதுவரை வந்த நிலவரப்படி பாஜக அதன் வேட்பாளர்கள் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர் . காங்கிரஸ் 79 இடங்களில் முன்னலையில் உள்ளது. இதுவரையிலான போக்குகளின்படி, கொண்டாட்டங்களுக்கு பாஜக தயாராகிவிட்டது. அதே நேரம் பாரத் ஆதிவாசி கட்சி மற்றும் சுயேச்சைகள் தலா ஐந்து இடங்களிலும், பிஎஸ்பி மற்றும் சிபிஎம் தலா இரண்டிலும் முன்னணியில் இருக்கின்றன. இந்த கட்சிகள் கிளியர் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் கிங் மேக்கர்களாக மாற வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பபதாக தெரியவில்லை.

why magalir urimai thogai Promises Failed in Rajasthan: Why Congress Lost in three state?

காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு எண்ணிகை தொடங்கியதில் இருந்தே சரியான முன்னேற்றம் இல்லை. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது தொகுதியான சர்தார்புராவில் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த நிலையில், மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளார் . அதே நேரத்தில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் டோங்கில் பின்தங்கி இருந்தார் . டோங்க் தொகுதியில் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ராஜஸ்தானில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் முன்னிலைக்கு வந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் பாஜக மாறி மாறி ஆட்சி செய்வது வழக்கம். அந்த வகையில் தான் இதுவரை நடந்துள்ளது. காங்கிரஸில் அசோக் கெலாட்டும், பாஜகவில் வசுந்தரா ராஜேவும் மாறி, மாறி முதல்வராகி வந்தார். இந்த நடைமுறையை தாம் மாற்றிக் காட்டுவோம் என கூறிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை நம்பி இருந்தார்.குறிப்பாக மகளிருக்கு மாதம் உதவி உள்ளிட்ட வாக்குறுதிகளையே அளித்திருந்தார். தமிழகம், கர்நாடகாவை பின்பற்றி அளித்த வாக்குறுதிகள் ராஜஸ்தானில் எடுபடவில்லை.

என்ன வாக்குறுதி: மகளிருக்கு மாதந்தோறும் நிதியுதவி அளிப்பதாக அளித்த வாக்குறுதியை தென்னிந்திய மக்கள் ஏற்றுக் கொண்ட நிலையில் , வட இந்திய மக்கள் அதனை ஏற்கவில்லை. இதனால் தென்னிந்தியாவில் கர்நாடகா , தெலுங்கானாவை காங்கிரஸ் வென்ற நிலையில், ராஜஸ்தான, சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் அந்த வாக்குறுதிகள் எடுபடாமல் போனதால் பின்னடைவை சந்தித்துள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதி என்ன: ராஜஸ்தானில் 1.05 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500-க்கு மானிய விலை வழங்கப்படும் ,குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வெகுமானம் வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருதல், அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குதல், பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அமல்படுத்துதல், மாநிலத்தில் 'கோ தன்' திட்டம் மூலம் பசுஞ்சாணத்தை கிலோவுக்கு ரூ.2-க்கு வாங்கிக் கொள்ளுதல் மற்றும் இயற்கை பேரிடர் சேதங்களுக்கு ரூ.15 லட்சம் காப்பீடு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தருந்தது. ஆனால் காங்கிரஸின் வாக்குறுதிகள் எதுவும் எடுபடவில்லை.

why magalir urimai thogai Promises Failed in Rajasthan: Why Congress Lost in three state?

அதேபோல் பாஜக அளித்த வாக்குறுதிகள் பலனை கொடுத்துள்ளது. ராஜஸ்தானில் பாஜக அளித்த வாக்குறுதிகள்.. உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளுக்கு காஸ் சிலிண்டருக்கு ரூ.450 மானியம் அளிக்கப்படும். 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்படும். பெண்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படும்.

அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிர் பிரிவு ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு நகரிலும் ஈவ் டீசிங் பிரச்சினையை தடுக்கும் பிரிவு தொடங்கப்படும். பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் பெயரில் ரூ.2 லட்சம் மதிப்பில் சேமிப்பு பத்திரம் வழங்கப்படும். நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பாலிசி வழங்கப்படும் போன்ற பல வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருந்தன. இந்த வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பது தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+