முடியாது போ.. கைக்கு வந்தத விட்டுட்டு.. மேட்ச் முடிவில் தீபக் சஹாரிடம் கோபப்பட்ட தோனி.. என்னாச்சு?
அகமதாபாத் : சிஎஸ்கே - குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே வென்று கோப்பையை கைப்பற்றிய நிலையில், போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே வீரர் தீபக் சஹாரிடம் கேப்டன் தோனி செல்லமாக கோபப்பட்ட வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
நேற்று நடந்த ஐபிஎல் 2023 இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன் அணியை வென்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஜடேஜா அடித்த பவுண்டரி, தோனி பிடித்த கேட்ச், ஸ்டம்ப் இட், சிஎஸ்கேவின் வெற்றியைத் தொடர்ந்து ஓடி வந்த ஜடேஜாவை கேப்டன் தோனி தூக்கிக் கொண்டாடியது என பல வீடியோக்களும் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கேப்டன் தோனி, சிஎஸ்கே வீரர் தீபக் சஹாரிடம் கோபப்படும் வீடியோ ஒன்றும் தீயாகப் பரவி வருகிறது. நேற்றைய ஃபைனலில் தீபக் சஹாரின் ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சு சுமாராகவே அமைந்தது. 3 ஓவர் வீசிய தீபக் சஹார் 31 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.
குஜராத் அணியின் முன்னணி பேட்டரான சுப்மன் கில் விக்கெட்டை எடுக்க கிடைத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளையும் நேற்று தவறவிட்டார் தீபக் சஹார். போட்டியின் 2வது ஓவரில் சுப்மன் கில் 3 ரன்களில் இருந்த போது, துஷார் தேஷ்பாண்டே வீசிய 4வது பந்தை பேக்வர்டு ஸ்கொயரில் அடித்தார் கில். கையில் விழுந்த அந்தப் பந்தை தீபக் சஹார் கோட்டைவிட்டார்.
தீபக் சஹார் கோட்டைவிட்ட கேட்ச்சை பயன்படுத்தி கொண்டு மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சுப்மன் கில் 20 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். ஜடேஜா பந்து வீசியபோது காலை லேசாக நகர்த்திய சுப்மன் கில்லை மின்னல் வேகத்தில் ஸ்டம்ப் அவுட் செய்து வெளியேற்றினார் தோனி.
தீபக் சஹார் இன்னொரு கேட்ச் வாய்ப்பையும் தவறவிட்டார். தீபக் சஹார் அவரே வீசிய பந்தில் விருத்திமான் சாஹா அடித்த பந்தையும் கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டார். எனினும், ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டுடன் சிஎஸ்கே மகத்தான வெற்றியைப் பதிவு செய்து சாம்பியன் ஆனது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்குப் பிறகு கேப்டன் தோனியிடம் சிஎஸ்கே வீரர்கள் தங்கள் ஜெர்சியில் ஆட்டோகிராஃப் பெற்றனர். அப்போது, ஆட்டோகிராப் வாங்க தீபக் சஹார் வந்தார். ஆனால் அவருக்கு கையெழுத்து போட மாட்டேன் என செல்லமாக கோபித்துக் கொண்டார் கேப்டன் தோனி.

மேலும், அருகில் இருந்த ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜிவ் சுக்லாவிடம், தீபக் சஹார் கைக்கு வந்த கேட்ச்சை பிடிக்காமல் தவறவிட்டதை சுட்டிக்காட்டி விமர்சித்தார். பின்னர் ராஜீவ் சுக்லாவும் சிரித்தபடி, தீபக் சஹார் தோளை செல்லமாக தட்டினார். பின்னர் தீபக் சஹாருக்கு ஜெர்சியில் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார் கேப்டன் தோனி.
தீபக் சஹார், மார்க்கருடன் வந்து தோனியிடம் ஆட்டோகிராஃப் கேட்டு, அவர் மறுத்து, தனது கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. சிஎஸ்கே ரசிகர்கள் பலரும், இந்த வீடியோவுக்கு தாங்களே காமெடியாக சப் டைட்டில் எழுதி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications