சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தபோது ஓபிஎஸ் கையெழுத்திட்டது ஏன்? தம்பிதுரை கேள்வி
சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்ததற்கான ஆவணத்தில் ஓ.பன்னீர் செல்வமும், அவருடன் உள்ளவர்களும் கையெழுத்திட்டது ஏன் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை ஒருமனதாக தேர்வு செய்ததற்கான கோப்புகளில் ஓ.பன்னீர் செல்வம் கையெழுத்திட்டது ஏன் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்று சசிகலா காய்நகர்த்தி வந்தார். அதன்படி, கட்சியும் வேண்டாம், பதவியும் வேண்டாம் என்று கூறியபடியே அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் மாத இறுதியில் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் கட்சியும், ஆட்சியும் ஒருவரின் கையிலேயே இருக்க வேண்டும் என்றும் முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் மறைமுகமாக சசிகலாவின் ஆதரவு அமைச்சர்களும், நிர்வாகிகளும் தொடர் பேட்டியளித்தனர்.
இந்நிலையில் சசிகலாவின் துரதிருஷ்டம், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகியது.
இதுகுறித்து டெல்லியில் தம்பிதுரை கூறுகையில், சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்த போது அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார் என்பதை அவரால் மறுப்பு முடியுமா?
அதேபோல் சசிகலாவை அதிமு பொதுச் செயலாளராக செயற்குழு, பொதுக் குழு கூட்டி பெரும்பான்மை ஆதரவுடன் நியமிக்கப்பட்டார். அதற்கான கோப்பில் ஓ.பன்னீர் செல்வமும், அவருக்கு ஆதரவாக உள்ள அனைவரும் கையெழுத்திட்டனர். அது ஏன்?
பொதுச் செயலாளர் இல்லை என்றால் அவைத் தலைவர்தான் கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தற்போது கூறும் அவைத் தலைவர் மதுசூதனன் அச்சமயம் என்ன செய்து கொண்டிருந்தார்? என்று தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications