மழை வந்ததால் மகிழ்ச்சி... ஆனால் பின்னாடியே டெங்கு வந்தால் என்ன செய்வது.. கவலையில் பெங்களூரு!
பெங்களூரு: தென்மேற்குப் பருவமழை காரணமாக பெங்களூருவில் மீண்டும் குளுகுளு கிளைமேட் திரும்பியுள்ளது. ஆனால், காலை மற்றும் மாலை வேளைகளில் மழை பெய்வதால் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்வோர் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விட்டு விட்டு மழை கொட்டி வருகிறது.
எப்போதும் குளுகுளுவென இருக்கும் நகரமான அறியப்படும் பெங்களூரு, கோடையின் போது கொளுத்தும் வெயிலால் நரகமானது. ஆனால் தற்போது மீண்டும் அங்கு மழை காரணமாக அங்கு குளுமை திரும்பியுள்ளது.

காலை, மாலையில்...
ஆனால், பெரும்பாலும் குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் மழை பெய்வதால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வேலைக்குச் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல், வீடு திரும்ப முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

சுகாதாரச் சீர்கேடு...
மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்குவதால், போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. ஆங்காங்கே கழிவுநீர் மழை நீரோடு கலப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

ஜூலை...
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பெய்யும் மழையளவையே இந்தாண்டும் பெங்களூரு பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஜூலையில் மழையளவு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

நோய் பரவும் அபாயம்...
இதனால் மீண்டும் தங்கள் நகருக்கு குளுகுளு சீதோஷ்ணம் கிடைத்து விட்ட மகிழ்ச்சி ஒருபுறம் மக்கள் மத்தியில் இருக்க, மறுபுறம் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய் பரவும் அச்சமும் காணப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications