சேவல்களுக்கு கொடுக்கப்படும் ‛‛வயாகரா’’.. இப்படியுமா செய்வாங்க! அலறும் ஆந்திரா.. காரணம் இதுதான்
அமராவதி: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆந்திராவில் சேவல்களுக்கு ‛வயாகரா' கொடுக்கப்படுகிறது. இந்த சேவல்களை சமைத்து சாப்பிட்டால் மனிதர்களுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் ஆந்திராவில் சேவல்களுக்கு ‛வயாகரா' கொடுக்கப்படுவது ஏன்? என்பது பற்றியும் அதன் பின்னணியில் உள்ள ஷாக் தகவலும் வெளியாகி உள்ளது.
வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் 16ம் தேதி மாட்டு பொங்கலும், 17 ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த 3 நாட்களும் ஜல்லிக்கட்டு உள்பட பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

தமிழகத்தை போல் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு மகர சங்கராந்தி என்ற பெயரில் 3 நாட்கள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் ஆந்திராவில் சேவல் சண்டை, கிடா சண்டைகள் நடப்பது வழக்கம்.
இந்நிலையில் தான் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஆந்திராவில் சேவல் சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்களுக்கு ‛வயாகரா' வழங்கப்படுகிறது. சேவல்களுக்கு ‛வயாகரா' அளிப்பதற்கு முக்கிய காரணம் அங்கு பரவும் ராணிகேத் நோயாகும். அதாவது சங்கராந்தி் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆந்திராவில் சேவல் சண்டைகள் மூலம் சிலர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்கள்.
தற்போது சேவல்களுக்கு ‛ராணிகேத்' நோய் பரவுகிறது. இதனால் சேவல்கள் பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்படுகின்றன. இத்தகைய சூழலில் அந்த சேவல்களை வைத்து சண்டையிட்டு பணம் சம்பாதிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனை சரிசெய்யவும், சேவல் சண்டையில் வெற்றி பெற்று அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும் தான் தற்போது சண்டை சேவல் வளர்ப்போர் சேவல்களுக்கு ‛வயாகரா 100, ஷிலாஜித் உள்பட பாலுணர்வை தூண்டும் மருந்துகளை கொடுக்கின்றனர்.
இதன்மூலம் சேவல் புத்துணர்வு பெறுவதுடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் என சேவல் வளர்ப்போர் நம்புகின்றனர். இருப்பினும் சேவல்களுக்கு ‛வயாகரா' உள்ளிட்ட பாலுணர்வை தூண்டும் மருந்துகள் கொடுப்பது என்பது சேவல்களுக்கும், அதனை சமைத்து உண்ணும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும் கூட தற்போது ஆந்திராவில் குண்டூர், கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் இத்தகைய செயலில் மக்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது ஆந்திர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுபற்றி சேவல் வளர்ப்போர்களிடம் கேட்டபோத ‛‛ராணிகேத் நோய் தாக்குதலுக்கு பிறகு சேவல்கள் சோர்வாகி உள்ளன. தரமான சண்டை சேவல்களும் முடங்கி உள்ளன. இதனால் சேவல்களை மீட்க இதுபோன்ற மருந்துகளை கொடுத்து வருகிறோம்'' என தவறை உணராமல் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications