For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த்.. பொள்ளாச்சியில் மகன் ஷூட்டிங்.. 'கட்' பண்ணா மோடி.. மனதில் 'மினிஸ்டர் சுதீஷ்'!

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜபக்சே வருகையை எதிர்த்து தமிழகத்தில் பல தரப்பட்ட மக்களும் வீறு கொண்டு போராடி வரும் நிலையில் தான் ஏன் மோடி பதவியேற்பு விழாவுக்குப் போகிறேன் என்பதை ஒரு பெரிய்ய்ய்ய அறிக்கை மூலம் சொல்லி விட்டு டெல்லிக்குக் கிளம்பிப் போயுள்ளார் விஜயகாந்த். கூடவே மச்சான் சுதீஷும், மனைவி பிரேமலதாவும். உண்மையில் சுதீஷை மந்திரியாக்கி அழகு பார்க்கும் முக்கியத் திட்டம்தான் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, விழாவைப் புறக்கணிக்கும் அளவுக்கு போக விடாமல் விஜயகாந்த்தைத் தடுத்து விட்டதாக சொல்கிறார்கள்.

தமிழ் இனப் படுகொலையாளன் ராஜபக்சேவை மோடி பதவியேற்புக்குக் கூப்பிட்டு விருந்து வைத்து கெளரவிக்கிறது புதிய பாஜக அரசு. இதற்கு வைகோ கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

அட, முதல்வர் ஜெயலலிதா கூட கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விழாவையும் புறக்கணித்துள்ளார். ஆனால் விஜயகாந்த்தோ பழைய கதையையெலல்லாம் சொல்லி ஒரு பெரிய அறிக்கை விட்டதோடு சரி.. கண்டனமும் தெரிவிக்கவில்லை, போக மாட்டேன் என்றும் சொல்லவில்லை.

காரணம், இப்போதைக்கு ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு காட்டுவதை விட மோடியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும், மச்சான் சுதீஷுக்கு நல்ல அமைச்சர் பதவியைப் பெற வேண்டும், அப்படியே ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட்டையும் பெற வேண்டும் என்பதுதான் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோரின் முக்கிய அஜென்டாவாக உள்ளதாம். இதனால்தான் எதிர்ப்புக் காட்டவில்லையாம் கேப்டன்...

ஷூட்டிங் ஷூட்டிங்

ஷூட்டிங் ஷூட்டிங்

பொள்ளாச்சியில் தங்கி தனது மகன் படப்பிடிப்பை மேற்பார்வை பார்த்து பிசியாக இருந்து வந்த விஜயகாந்த் 2 நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினாராம்.

அட தேர்தலாவது முடிவாவது, ராஜபக்சேவாவது..

அட தேர்தலாவது முடிவாவது, ராஜபக்சேவாவது..

மேலும் தேர்தலில் கட்சி போண்டியானது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையாம் விஜயகாந்த். அதுகுறித்து அவர் கவலைப்பட்டதாகக் கூட தெரியவில்லை என்கிறார்கள். மேலும் ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குரல்கள் குறித்தும் கூட அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.

மகன் படம்.. மச்சானுக்குப் பதவி.. அம்புட்டுதேன்..

மகன் படம்.. மச்சானுக்குப் பதவி.. அம்புட்டுதேன்..

மகன் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் நன்றாக வர வேண்டும் என்பதும், மச்சான் சுதீஷ் அமைச்சராக வேண்டும் என்பதிலும்தான் விஜயகாந்த் ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

குடும்பத்தோடு ஷூட்டிங்கில்

குடும்பத்தோடு ஷூட்டிங்கில்

விஜயகாந்த் மட்டுமல்லாமல் பிரேமலதா, சுதீஷ் ஆகியோரும் கூட பொள்ளாச்சியில் முகாமிட்டு ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வந்தனராம்.

பொள்ளாச்சி டூ டெல்லி டூ சென்னை டூ டெல்லி

பொள்ளாச்சி டூ டெல்லி டூ சென்னை டூ டெல்லி

பொள்ளாச்சியில் இருந்தபடியே தேர்தல் முடிவைப் பார்த்து விட்டு பின்னர் டெல்லி போய் மோடியைக் கட்டித் தழுவி, தடுமாறி விழுந்து பின்னர் கொஞ்சலை வாங்கிக் கொண்டு மீண்டும் பொள்ளாச்சிக்குத் திரும்பி, மறுபடியும் சென்னை வந்து தற்போது மீண்டும் டெல்லி செல்கிறார் விஜயகாந்த்.

கட்சிக்காரர்களா.. அது எதுக்கு...

கட்சிக்காரர்களா.. அது எதுக்கு...

தேர்தலில் போட்டியிட்டோமே, 10 தொகுதிகளில் டெபாசிட் போயிருச்சே.. கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவோமே என்று இல்லாமல், கட்சிக்காரர்கள் ஒருவரையும் இதுவரை விஜயகாந்த் சந்திக்கவில்லையாம். கட்சிக்காரர்களையே அவர் சந்திக்காமல் இருக்கிறாராம். கேட்டால் தலைவர் செம டென்ஷனாக இருக்கிறார் என்று கட்சிக்காரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறதாம்.

எம்.பி சீட்- அமைச்சர் பதவிதான் முக்கியம்

எம்.பி சீட்- அமைச்சர் பதவிதான் முக்கியம்

எம்.பி. சீட், அமைச்சர் பதவியை மட்டுமே தற்போதைக்கு விஜயகாந்த் முக்கியமாக கருதுகிறாராம். அதற்குப் பங்கம் விளைவிக்கும் எதையும் செய்ய, பேச அவர் தயாராக இல்லையாம். இதனால்தான் ராஜபக்சேவைக் கண்டித்து விழாவைப் புறக்கணிக்கும் தேவையற்ற முடிவுகளை அவர் எடுக்கவில்லை என்கிறார்கள்.

அறிக்கை விட்டாச்சே.. போதாதா..

அறிக்கை விட்டாச்சே.. போதாதா..

தான் ஏன் டெல்லிக்குப் போகிறேன் என்பது குறித்து நேற்று நீளமான அறிக்கை ஒன்றை விட்டு விட்டுத்தான் இன்று டெல்லிக்குப் போகிறார் விஜயகாந்த். அந்த அறிக்கை இதுதான்.

அரசியல்னா பம்முவதும், பம்மாத்து காட்டுவதும் சகஜம்தானே...!

English summary
DMDK is attending the Modi swearing in function because it expectes a Minister post and RS seat for his leader Vijayakanth's brother in law Sutheesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X