பக்கெட் மண்ணை அள்ளி.. தலையில் போட்டுக்கொண்ட காங்! "கோட்டைனா" சும்மாவா.. அமித் ஷா அதிர்ச்சி வைத்தியம்
அகமதாபாத்: ஹர்திக் பட்டேல் குஜராத்தில் பாஜகவில் இணைந்ததன் மூலம் அங்கு தேர்தல் பார்முலா மொத்தமாக மாறி இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமித் ஷா ஒரு ஜெனரல் டயர்.. பாஜக எனக்கு 1200 கோடி ரூபாய் கொடுத்து இழுக்க பார்க்கிறது என்று கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலின் போது கூறியவர் ஹர்திக் பட்டேல். பாஜகவை தீவிரமாக எதிர்த்து வந்த அதே ஹர்திக் பட்டேல் தற்போது பாஜகவில் ஐக்கியம் ஆகி இருக்கிறார்.
ஓடிட்டேன்ல என்று வடிவேல் காமெடியில் வருவது போல.. வேகமாக 150 கிமீ வேகத்தில் வந்து.. அப்படியே யூ டர்ன் பாஜகவில் இணைந்து இருக்கிறார் பட்டிதார் இன தலைவர்.

ஹர்திக் பட்டேல்
இவரின் "அந்த" மாதிரி வீடியோக்களை பகிர்ந்து அப்போது ஹர்திக் எல்லாம் தலைவரா என்று கிண்டலடித்துக்கொண்டு இருந்த அதே பாஜக.. எங்கள் கட்சியில் பட்டிதார் ரத்தம் சேர்ந்து விட்டது என்று ஹர்திக் வருகையை கொண்டாடி வருகிறார்கள். கடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய கேம் சேஞ்சராக பார்க்கப்பட்டவர் இப்போது பாஜக கேம்பிற்கு சென்றுள்ளார். ஹர்திக் பட்டேலின் இந்த மூவ் குஜராத் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அப்படி ஹர்திக் பட்டேல் என்ன தேர்தல் முடிவையே மாற்ற கூடிய ஆளா என்றால் இல்லை.. ஆனால் அவரின் பட்டிதார் சமூகம் நினைத்தால் தேர்தல் முடிவை மாற்றலாம்!

பட்டிதார்
குஜராத்தில் பட்டிதார் இனப்பிரிவு இல்லாமல் வெற்றிபெற முடியாது. அதிலும் அங்கு கடந்த 5 முதல்வர்களை பட்டிதார் இனப்பிரிவு மக்களே தேர்வுசெய்துள்ளனர். ஆம்.. பட்டிதார் இன மக்கள்தான் அங்கு தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தி. பாஜக குஜராத்தை கோட்டையாக வைத்து இருப்பதும் அப்படித்தான். அங்கு கடந்த 5 முதல்வர்களின் 4 முதல்வர்கள் பட்டிதார் உட்பிரிவான Leuva பட்டேல் இனப்பிரிவை சேர்ந்தவர்கள். மொத்தமாக உள்ள 182 இடங்களில் 60 இடங்களில் வெற்றியை இவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.

யார் இவர்கள்?
இதனால்தான் அங்கு பட்டிதார் தலைவர் ஹர்திக் பட்டேலை பாஜக வளைத்து உள்ளது. ஒரு காலத்தில் குஜராத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக இருந்தது. அங்கு பட்டிதார் ஆதரவு காங்கிரஸ் வசம்தான் இருந்தது. 30 வருடங்களுக்கு முன் அங்கு காங்கிரஸ் முதல்வர் மாதவ் சிங் பட்டிதார் இன மக்களை புறக்கணித்துவிட்டு சாத்திரிய - அரிஜன - முஸ்லீம் - ஆதிவாசி உருவாக்கினார். இதனால் காங்கிரஸ் அங்கு பட்டேல் இன மக்கள் ஆதரவை இழந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு அங்கு பாஜக வளர்ந்து, பட்டிதார் உதவியுடன் தொடர்ந்து ஆட்சியிலும் இருந்து வருகிறது.

,மீண்டும் எழுச்சி
இந்த நிலையில்தான் கடந்த சட்டசபை தேர்தலில் ஹர்திக் பட்டேல் என்ற பட்டிதார் தலைவர் உதவியுடன் காங்கிரஸ் குஜராத்தில் மீண்டும் எழுச்சி பெற்றது. அங்கு இதனால் காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. கடந்த 2017 சட்டபை தேர்தலில் பாஜக 99 இடங்களில் மட்டுமே வென்றது. முதல்முறை பாஜக இரட்டை இலக்கத்திற்கு சுருங்கி போக ஹர்திக் பட்டேல் காங்கிரசை ஆதரித்ததுதான் காரணம், அங்கு பாஜக ஆதரவு குறைய காரணம், அவர்கள் பட்டேல் இனப்பிரிவினர் இடையே ஆதரவை இழந்ததால்தான்.

அமித் ஷா மூவ்
ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் பக்கம் வந்ததால் பாஜக அங்கு ஆதரவை வெகுவாக இழந்தது. இந்த நிலையில்தான் அதே ஹர்திக் பட்டேலை சரியாக குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பாஜக பக்கம் வரவழைத்து அமித் ஷா அதிரடி காட்டி இருக்கிறார். கடந்த சில காலமாகவே பட்டிதார் பிரிவு மக்களின் வாக்குகளை பெற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்ததிலும் சரி, விஜய் ரூபாணியை நீக்கிவிட்டு பட்டித்தார் இன பிரிவை சேர்ந்த புபேந்திரபாய் பட்டேலை முதல்வராக நியமித்ததிலும் சரி.. பாஜக ஸ்மார்ட்டாகவே செயல்பட்டு வந்தது.

தட்டி தூக்கிய பாஜக
முத்தாய்ப்பாக தற்போது ஹர்திக் பட்டேலையும் தட்டி தூக்கி உள்ளது. குஜராத்தான் தங்கள் கோட்டை என்பதை மீண்டும் பாஜக நிரூபித்து உள்ளது. இது பாஜகவின் ராஜதந்திரம் என்பதை தாண்டி.. காங்கிரசின் தவறு என்றும் சொல்ல முடியும். காங்கிரஸ் தனது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் ஹர்திக் பட்டேலை கட்சியின் செயல் தலைவராக நியமித்தாலும்.. அவரின் ஆதரவாளர்கள் யாருக்கும் பதவி தராமல் காங்கிரஸ் புறக்கணித்தது. அவரின் பேச்சுக்கு கட்சியில் மதிப்பே இல்லாமல் இருந்தது.

கோபம்
இதை கடந்த 1 வருடமாக பல இடங்களில் ஹர்திக் பட்டேல் நேரடியாக சொல்லிவிட்டார். ஆனால் அப்போதெல்லாம் ஆக்சன் எடுக்காமல் அமைதியாக இருந்த காங்கிரஸ்.. தற்போது பொறுத்தது போதும் போட் மாறு என்று பாஜகவிற்கு தாவி இருக்கிறார் அமித் ஷா. ஹர்திக் பட்டேல் இழப்பால் காங்கிரஸ் கட்சி குஜராத் தேர்தலில் வெல்வது சிக்கலாகி உள்ளது. இனி எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது என்பதால்தான் நரேஷ் பட்டேலை வளைக்கும் திட்டத்தில் காங்கிரஸ் இறங்கி உள்ளது.குஜராத்தில் பட்டிதார் இனப்பிரிவான Leuva Patel பிரிவை சேர்ந்த நரேஷ் பட்டேல் என்ற இளம் தலைவரை காங்கிரசுக்கும் இழுக்க முயன்று வருகிறது. ஹர்திக் பட்டேல் இடத்தை அவர் நிரப்புவார் என்று காங்கிரஸ் நம்புகிறார்.. ஆனால் இவரையாவது காங்கிரஸ் சரியாக யூஸ் செய்யுமா என்பது போக போகத்தான் தெரியும்!
-
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications