இறுக்கி அணைக்க கெஜ்ரிவால் என்ன ஹீரோயினா?.. லாலு நக்கல்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: அரவிந்த் கெஜ்ரிவால் என்ன ஹீரோயினா அவரை இறுக்கி அணைக்க என ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
விவிஐபிகளுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கைது செய்ய வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில்,
சோனியா காந்தியை கைது செய்ய வேண்டும் என்று கூறுவதை கெஜ்ரிவால் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் பேசுவது ரொம்ப ஓவராக இருக்கிறது என்றார்.
நவம்பர் மாதம் நிதிஷ் குமார் பீகார் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கெஜ்ரிவாலை கட்டிப்பிடித்தீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு லாலு கூறுகையில்,
அவர் என்ன ஹீரோயினா, இறுக்கி கட்டிப்பிடிக்க என்று பதிலுக்கு கேள்வி கேட்டார்.












Click it and Unblock the Notifications