Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொல்கத்தாவிலும் ஒரு கோவை சரளா.. தினசரி அடி உதை.. துப்பாக்கி காட்டி கணவர் காதை கட் செய்து எறிந்தார்

கொல்கத்தாவில் கணவரின் காதை மனைவியும் அவரது சகோதரியும் துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கொல்கத்தாவில் கணவரின் காதை மனைவியும் அவரது சகோதரியும் துப்பாக்கி முனையில் துண்டித்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நர்கல்டங்க் என்ற பகுதியைச் சேர்ந்தவர் முகமது தன்வீர் (20). இவருக்கு மும்தாஜ் (40) என்ற மனைவி உள்ளார். இவர் தன்வீரை விட 20 வயது மூத்தவர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியது.

இந்நிலையில் தன்வீரை அவரது மனைவி தினந்தோறும் அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறப்படுகிறது.

குண்டர்களை விட்டு பிடிப்பது

குண்டர்களை விட்டு பிடிப்பது

இதற்கு பயந்து கொண்டு தன்வீர் வீட்டை விட்டு ஓடுவதும் , அவரை குண்டர்களை ஏவி மும்தாஜ் பிடித்து கொண்டு வருவதும் வாடிக்கையாக இருந்தது. தன்வீரை விட்டு விலகுமாறு அவரது தாய், மும்தாஜிடம் கேட்டும் அது நடக்கவில்லை.

அதிக பணம்

அதிக பணம்

பணம் கொடுத்தாலாவது தன் மகனை விட்டுவிடுவார் என்று வீட்டை விற்று அதிக பணத்தை மும்தாஜுக்கு கொடுத்தனர். எனினும் தன்வீரை அவர் விடவில்லை. இவர் மும்தாஜின் வீட்டில்தான் வசித்து வருகிறார். தன்வீரின் தாயை சந்திக்கக் கூட அவருக்கு அனுமதி வழங்குவதில்லை.

காது துண்டிப்பு

காது துண்டிப்பு

தன்வீர் அவர் வசிக்கும் முல்லிக்பூரிலிருந்து ஓடிவிட்டார். ஆனால் அவர் மீண்டும் குண்டர்களால் அழைத்து வரப்பட்டு மும்தாஸும் அவரது சகோதரியும் கடுமையாக தாக்கினர். மேலும் ஆத்திரம் அடங்காமல் நேற்று இரவு இருவரும் துப்பாக்கியை காட்டி மிரட்டி தன்வீரின் காதுகளை துண்டித்தனர்.

ஏன் திருமணம்

ஏன் திருமணம்

பின்னர் அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்த தன்வீரை தகவலறிந்த உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபோல் தன்வீரை கொடுமை செய்யும் மும்தாஜ் அவரை ஏன் திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. போலீஸார் தேடி வருவதை அடுத்து மும்தாஜும் அவரது சகோதரியும் தலைமறைவாகிவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+