For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடிகார கணவனுக்கு பாடம் புகட்ட கண்ணில் ஃபெவிகுவிக்கை ஊற்றிய மனைவி

By Siva
Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவன் தூங்கும்போது அவரது கண்ணில் ஃபெவிகுவிக்கை ஊற்றியுள்ளார் மனைவி.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ். அவரது மனைவி விஜயலட்சுமி. சந்தோஷுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. மதுவுக்கு அடிமையான அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

Wife pours Fevikwik in husband's eyes

குடிபோதையில் வரும் அவர் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். குடிப்பழக்கத்தை விட்டுவிடுமாறு விஜயலட்சுமி வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை. இதனாலேயே கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சொல்லி சொல்லி பார்த்த விஜயலட்சுமி தனது கணவருக்கு ஒரு பாடம் புகட்ட நினைத்தார். இதையடுத்து சந்தோஷ் தூங்கும்போது அவரது கண்ணில் ஃபெவிகுவிக் பசையை ஊற்றிவிட்டார்.

பெவிக்விக் ஊற்றப்பட்ட பிறகு சந்தோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A wife who got irritated by her husband's drinking habit poured fevikwik in his eyes in Madhya Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X