கெலாட்- பைலட் உட்கட்சி மோதலால் ராஜஸ்தானில் கோட்டைவிடும் காங்கிரஸ்.. என்ன இப்படி ஆகிட்டுச்சு.!
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தானில் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே மோதல் தொடரும் நிலையில், இது தேர்தல் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
இன்னும் சில வாரங்களில் மபி, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்ட நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதில் ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கிறது. அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுவதால் ராஜஸ்தான் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
உட்கட்சி மோதல்: மேலும், ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரே அங்கே முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே நிலவும் கருத்து வேறுபாடு தொடர்ந்து வருகிறது. வெளியே செய்தியாளர்களிடம் இருவரும் ஒன்றாகத் தேர்ந்து பணியாற்றுவோம் எனச் சொன்னாலும் உள்ளே புகைச்சல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே இந்த உட்கட்சி மோதல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஏபிபி சிவோட்டர் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதில் பாஜக ஆதரவாளர்களில் 65.3% பேர் கொலட்- சச்சின் பைலட் மோதலால் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பு ஏற்படும் எனக் கூறியுள்ளனர். அதேபோல காங்கிரஸ் ஆதரவாளர்களிலும் கூட 42.2% பேர் இதனால் கட்சி பாதிக்கப்படும் என்றே கூறியுள்ளனர். எந்தக் கட்சியைச் சேராதவர்களில் 47.5% பேர் காங்கிரஸுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் எனக் கூறியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 52.8% பேர் இதனால் காங்கிரஸ் கட்சிக்குப் பாதிப்பு எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிப்பு: இது பெரிய விஷயம் இல்லை என்றாலும் சிறிதளவு காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என 12.9% பாஜக ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். மேலும், காங்கிரஸ் ஆதரவாளர்களில் 19.9% பேரும் எந்தக் கட்சியையும் சேராதவர்களில் 13.8% பேரும் சிறியளவு பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, 15.8% பேர் காங்கிரஸ் கட்சிக்குச் சிறியளவு பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்.
அதேபோல அசோக் கெலாட்- சச்சின் பைலட் மோதலால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று 17.1% பாஜக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மேலும், காங்கிரஸ் ஆதரவாளர்களில் 36% பேரும் கட்சி சார்பு இல்லாதவர்களில் 38.8% பேரும் இதனால் காங்கிரஸுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 28.7% பேர் காங்கிரஸ் கட்சிக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என்கிறார்கள்.
தொடரும் மோதல்: கடந்த பல ஆண்டுகளாகவே அங்கே ராஜஸ்தானில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே மோதல் தொடர்கிறது. இது ராஜஸ்தான் அரசியலில் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. இந்தாண்டு தொடக்கத்தில் "ஜன் சங்கர்ஷ் யாத்ரா" என்று ஊழலுக்கு எதிரான யாத்திரையைத் தொடங்கப் போவதாக சச்சின் பைலட் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் டெல்லி தலைமை தலையிட்டு இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை இப்போது வரை வெளியான கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்குச் சற்று சாதகமான சூழல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் கெலாட் மீது ராஜஸ்தான் மக்கள் மிகப் பெரிய மரியாதையை வைத்துள்ளனர். நிலைமை இப்படி இருக்க கெலாட்- பைலட் மோதல் அங்கே தேர்தல் அரசியலில் எப்படி எதிரொலிக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications