ஜெயலலிதா அப்பீல் மனு மீது தீர்ப்பு தேதி இன்று வெளியாகிறதா? வாட்ஸ்அப் தகவலால் பரபரப்பு!
பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீது இன்று தீர்ப்பு தேதி வெளியாவதாக வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் அப்பீல் மனு விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. நீதிபதி குமாரசாமி, தீர்ப்பு தேதியை சொல்லாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

இதனிடையே பவானிசிங் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது, தீர்ப்பு அளிக்க ஏப்ரல் 30ம் தேதிவரை காலக்கெடு கேட்டுக் கொண்டார் ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி. இதையடுத்து மே 12ம் தேதி வரை தீர்ப்புக்கு கெடு கொடுத்தது சுப்ரீம் கோர்ட்.
ஆனால், பவானிசிங் வழக்கு முடிந்து கடந்த மாதம் 27ம் தேதியே தீர்ப்பு வெளியாகிவிட்டது. இதையடுத்து அன்பழகன் மற்றும் கர்நாடக தரப்பு ஹைகோர்ட்டில் தங்கள் தரப்பு வாதத்தையும் தாக்கல் செய்துவிட்டது.
இந்நிலையில், ஹைகோர்ட்டில் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான், ஜெயலலிதா அப்பீல் மனு மீது எப்போது தீர்ப்பு வெளியாகும் என்பதை கர்நாடக ஹைகோர்ட் இன்று அறிவிக்க உள்ளதாக காலை முதலே வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் நாடு முழுவதும் தீயாய் பரவி வருகிறது.
இதுகுறித்து ஹைகோர்ட் வட்டாரங்களிடம் கேட்டபோது "தீர்ப்பு வெளியாகுவது குறித்து ஒருநாள் முன்பாக ஹைகோர்ட் அறிவிக்கும். இரவு 7 மணிக்குள் இந்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம். உதாரணத்துக்கு, நாளை, செவ்வாய்க்கிழமை, தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தால், அதுகுறித்து இன்று இரவு 7 மணிக்குள் ஹைகோர்ட் நேட்டிபிகேஷன் செய்யும்" என்று தெரிவித்தனர்.
பெங்களூரு நகர போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோதும், தங்களுக்கு எந்த முன்னெச்சரிக்கை தகவலும் இதுவரை வரவில்லை என்று கூறிவிட்டனர்.
எனவே இன்று இரவு 7 மணிக்குள், தீர்ப்பு தேதி வெளியாகாவிட்டால், வாட்ஸ்அப் தகவல் வதந்தியாகிவிடும்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications