நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜகவுக்கு எதிராக வாக்களித்த சிவேசனா, ஒதுங்கிக் கொண்ட பவார் கட்சி
மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை.
மஹாராஷ்டிரா சட்டசபையில் மைனாரிட்டி பாஜக அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜக அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அது தனது பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக 23 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்பட்டது.

பாஜக அரசுக்கு 7 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா ஆகியவை ஆதரவு தெரிவித்தனர்.
இன்று மஹாராஷ்டிரா சட்டசபையில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு குரல் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு காங்கிரஸ், சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த குரல் வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக கூறிய தேசியவாத காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
பாஜகவுடன் பலமாக பேரம் பேசி தோல்வி கண்ட சிவசேனாவோ எதிராக வாக்களித்தது. இப்படியான சூழலில் பாஜக அரசு பெரும்பான்மையைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
முன்னதாக பாஜக சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே மஹாராஷ்டிரவில் நிலையான அரசு அமைய பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. மேலும் இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப்போவதாகவும் அக்கட்சி அறிவித்திருந்தது.
ஆனால் அறிவித்தபடி அக்கட்சி வாக்களிக்கவில்லை. நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று தேசியவாத காங்கிரஸ் பலமுறை தெரிவித்தும் பாஜக அதை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications