கர்நாடக அரசு பெண் ஊழியர்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்: காங். தேர்தல் அறிக்கையில் அதிரடி
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள காங்கிரஸ், அரசு ஊழியர்களை கவர் செய்யும் விதமாக, அரசு பெண் ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கும்போது 50 சதவீதம் மா
மங்களூர்: அரசு பெண் ஊழியர்களுக்கும், பஞ்சாயத்துகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் 50 சதவீத மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மங்களூர் நகரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே, 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது காங்கிரஸ்.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள காங்கிரஸ், அரசு ஊழியர்களை கவர் செய்யும் விதமாக, அரசு பெண் ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கும்போது 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் அல்லது, ரூ.30,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல பஞ்சாயத்துகளில் பணிபுரியும் பெண்களுக்கும் இதே சலுகை பொருந்தும்.
இந்த பெண் ஊழியர்கள் வருடாந்திர வருமானம் ரூ. 2,50,000 மிகாமல் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
தமிழகத்திலுள்ள அம்மா கேன்டீன் திட்டத்தை காப்பியடித்து, இந்திரா கேன்டீன் என்ற திட்டத்தை சித்தராமையா அரசு செயல்படுத்தி வருகிறது. இதேபோல அம்மா ஸ்கூட்டர் மானிய திட்டத்தை போலவே ஸ்கூட்டர் திட்டத்தை தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications