சோனியா, ராகுல் மாதிரி நானும், என் மகனும் கட்சியை நடத்துவோம்: ராப்ரி தேவி
பாட்னா: சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் காங்கிரஸை வழிநடத்துவது போன்று தானும், தனது மகனும் ராஷ்ட்ரிய ஜனதாதளத்தை நடத்தப்போவதாக ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கட்சியை அவரது மனைவி ராப்ரி தேவி வழிநடத்துவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம்க்ரிபால் யாதவ் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து ராப்ரி தேவி கூறுகையில்,
அவர் கட்சியை உருவாக்கி, வளர்த்துவிட்டார். அவர் சிறையில் இருக்கும்போது நானும் என் மகனும் கட்சியை வழிநடத்துவோம். எப்படி சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அவர்களின் மூதாதையர்கள் உருவாக்கிய காங்கிரஸை வழிநடுத்துகிறார்களோ அதே போன்று நாங்களும் எங்கள் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்.
ராப்ரி தேவிக்கு தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் என்று 2 மகன்கள் உள்ளனர். ராப்ரி தேவி கடந்த 1997ம் ஆண்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிபிஐ நீதிமன்றத்தில் சரண் அடைந்தபோது பீகாரின் முதல்வர் ஆக்கப்பட்டார். அதன் பிறகு 2000ம் ஆண்டு மீண்டும் முதல்வர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications