பெட்ஷீட்டுகளை கயிறாக்கி... உ.பி. சீர்திருத்த மையத்திலிருந்து தப்பி ஓடிய 91 சிறார்கள்!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் படுக்கை விரிப்புகளை சேர்த்து கயிறாக்கி, சீர்திருத்த மையத்திலிருந்து 91 சிறுவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சிறார் சீர்திருத்த மையத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சுமார் மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த சிறார் சீர்திருத்த மையத்தில், அறை ஒன்றின் ஜன்னல்களில் இருந்த இரும்பு கம்பிகளை நீக்கி, 90க்கும் அதிகமான சிறுவர்கள் தப்பி ஓடியுள்ளனர். கட்டிடத்தில் இருந்து கீழே இறங்கித் தப்பிக்க அவர்கள் படுக்கை விரிப்புகளை ஒன்றாக இணைத்து கயிறாக பயன்படுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூன்றடுக்கு மாளிகையான இந்த மையத்தில் இருந்து தப்புவதற்கு அவர்கள் படுக்கை விரிப்புகளைக் கயிறாகப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

தப்பி ஓடிய 91 சிறுவர்களில், அவர்களில் 35 பேரை திரும்ப பிடித்துவிட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். தப்பிய அனைவருமே 18 வயதுக்குக் கீழானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஓம் பிரகாஷ் கூறும்போது, "காவலர்கள் சிறையின் முன்பு காவல் காத்திருந்தார்கள். அப்போது சிறுவர்கள் கட்டிடத்தின் பின்பக்கம் உள்ள ஜன்னல் கம்பிகளை நீக்கி, படுக்கை விரிப்புகளைக் கயிறாகப் பயன்படுத்தி தப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருட்டு மற்றும் வழிப்பறி ஆகிய வழக்குகளில் சிக்கியவர்கள்" என்றார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் இதே சிறுவர் சீர்திருத்த மையத்தில் தான் சிறுவர்கள் சேர்ந்து போலீஸ்காரர் ஒருவரை அடித்துக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications