ஆட்டம் காணும் “ஐடி” துறை – மைக்ரோசாப்ட்டைத் தொடர்ந்து 6000 பேரை வீட்டுக்கு அனுப்பும் சிஸ்கோ!
மும்பை: மென்பொருள் துறையில் ஐபிஎம், மைக்ரோசாப்ட்டைத் தொடர்ந்து ஐடி ஊழியர்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக பிரபலமான நெட்வொர்க்கிங் நிறுவனமான சிஸ்கோ தன்னுடைய 6,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ளது.
மைக்ரோசாப்டில் பணியாற்றும் 18,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் ஐ.டி துறை ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நெட்வொர்க் சாதனங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமான சிஸ்கோ, தற்போது தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
ரவுட்டர்கள், அதி நவீன சுவிட்சுகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள சிஸ்கோவின் வருமானம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரவுட்டர்கள் மற்றும் சுவிட்சுகளை வாங்கும் நிறுவனங்கள் சந்தைக்கு வரும் புதுப்புது தயாரிப்புகளை நோக்கி செல்வதால் சிஸ்கோவின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு 4 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை குறைந்து வருகின்றது. இதனால் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications