ஓடும் ரயிலில்.. லேடீஸ் கோச்சில் பெண் பலாத்காரம்.. நகைகள் கொள்ளை.. டெல்லி ஷாக்!
டெல்லியில் ஓடும் ரயில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : ஷதாரா - டெல்லி ரயில்வே ஸ்டேஷன் இடையே பெண்களுக்கான பெட்டியில் ஏறிய 3 பேர் அதில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்துள்ளார். அந்தப் பெட்டியில் பயணித்த மற்ற 4 பெண்கள் ஷதாரா ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியுள்ளனர். அப்போது அங்கிருந்து 3 ஆண்கள் பெண்கள் பெட்டியில் ஏறியுள்ளனர்.

அவர்களில் 2 பேர் அந்தப் பெண் வைத்திருந்த நகைப்பையை திருடிக்கொண்டு தப்பியோடிவிட்டனர். மூன்றாவது நபர் அவரை அடித்து தாக்கியதோடு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அடுத்த ஸ்டேஷனில் ஏறிய 2 போலீஸ் காவலர்கள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அந்த பெண் போராடுவதைக் கண்டனர்.
இதையடுத்து அந்த நபரை பிடித்து 'கவனித்த' போலீசார் பழைய டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி 2 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் ஷபாஸ் என்பதும் அவருககு 25 வயது என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நகையுடன் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். ஓடும் ரயிலில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications