பாலியல் சீண்டல்.. பொறுத்து பொறுத்து பார்த்து.. பொங்கி எழுந்த பெண்.. கட்டி வைத்து என்னா அடி.. வீடியோ
பாலியல் தொல்லை தந்த இளைஞரை அடித்து தாக்கியுள்ளார் ஒரு பெண்
Recommended Video
தெலுங்கானா: பொறுத்து பொறுத்து பார்த்து வெறுத்தே போய்விட்டார் அந்த பெண்.. பாலியல் தொல்லை எல்லை மீறவும், இளைஞனை மரத்தில் கட்டி வைத்து, செருப்பை கழட்டி அடித்திருக்கிறார்! இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது.
ஆனால் கல்யாணம் ஆன பெண் என்று தெரிந்தும், இளைஞர் ஒருவர் நீண்டகாலமாகவே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

பொறுமை
இதன் காரணமாக, அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார். இதை எப்படி வெளியில் சொல்வது, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் மனதுக்குள்ளேயே தவித்து வந்துள்ளார். ஆனாலும் இளைஞர் பாலியல் சீண்டலில் எல்லை மீறி கொண்டே இருப்பதை உணர்ந்த அந்த பெண் ஒருகட்டத்தில் பொறுமை இழந்துவிட்டார்.

ஐடியா
அதனால் நேராக தன் கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதுள்ளார். இதைக் கேட்டு திகைத்த கணவனோ, அந்த இளைஞனை வீட்டுக்கு பேசி வரவழைக்கும்படி மனைவிக்கு ஐடியா தந்துள்ளார். அதன்படியே அந்த பெண்ணும் செய்துள்ளார். கணவன் வீட்டுக்குள்ளேயே ஒரு ஓரமாக மறைந்து நின்றிருந்தார்.

இளைஞன்
வீட்டுக்கு வந்த இளைஞன், இப்போது இன்னும் அதிகமாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தவறாகவும் நடக்க முயற்சித்துள்ளார். இதை பார்த்த அந்த கணவர் ஓடிவந்து, இளைஞரை மடக்கி பிடித்து அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்தார். பிறகு தான் அணிந்திருந்த ஷூவை கழட்டி, மனைவியிடம் தந்து, இளைஞனை வெளுக்க சொன்னார்.

கைது
மனைவியும், இவ்வளவு நாள் அடக்கி வைத்த ஆத்திரத்தை மனதில் வைத்து சரமாரியாக பின்னி எடுத்துவிட்டார். போலீசார் வந்து சேரும்வரை, அந்த இளைஞனுக்கு அடி விழுந்துகொண்டே இருந்தது. இதையடுத்து தம்பதி இருவரும் இளைஞனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாலியல் தொல்லை தந்த இளைஞனை, பெண் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து செருப்பால் அடிக்கும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications