நான் வேணாமா.. என்கிட்ட பேசமாட்டியா.. 40 வயது காதலியை.. 31 இடங்களில் குத்தி கொன்ற 30 வயது காதலன்!
கள்ளக்காதலியை 31 இடங்களில் குத்தி கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்
கொல்லம்: "என் உறவு வேணாமா.. என்கிட்ட பேசமாட்டியா" என்று ஆத்திரமடைந்த 30 வயது இளைஞர், 40 வயது கள்ளக்காதலி ஷைலாவின் கழுத்து, மார்பு தோள்பட்டை என 31 இடங்களில் கத்தியால் சரமாரி குத்தி கொன்றுள்ள பயங்கரம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்துள்ள பகுதி அஞ்சுமுக்கு... அங்கு வசித்து வந்த தம்பதி ஷெரீப் - ஷைலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ஷெரீப் வெளி நாட்டில் வேலைபார்த்து வருகிறார்.. ஷைலாவுக்கு 40 வயதாகிறது.. அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான அனீஷ் என்ற லாரி டிரைவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.

புதுவீடு
வெளிநாட்டில் இருந்து ஷெரீப் உழைத்து சம்பாதித்து அனுப்பி கொண்டே இருந்துள்ளார்... மனைவிக்கு ஒரு புது வீடும் கட்டி கொடுத்துள்ளார்.. அந்த புதுவீட்டில்தான் அனீஷ்-ஷைலா இருவருமே குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.. இது சொந்தக்காரர்களுக்கு தெரிய ஆரம்பித்ததும் ஷைலாவை எச்சரித்துள்ளனர்.. அறிவுறுத்தி உள்ளனர்.. ஆனாலும் ஷைலா அனீஷ் உறவை துண்டிக்கவே இல்லை.

விவாகரத்து
விஷயத்தை உறவினர்கள் வெளிநாட்டில் இருந்த கணவனுக்கு தெரியப்படுத்தினர்.. இதை கேட்டு அதிர்ந்து போன ஷெரீப், இப்படிப்பட்ட மனைவி தனக்கு தேவையில்லை என்று முடிவெடுத்து, விவாகரத்து செய்ய துணிந்தார். தான் எது சொன்னாலும் இதுவரை நம்பி வந்த கணவர், இப்படி திடீரென விவாகரத்து செய்ய முடிவெடுத்ததும் அதிர்ந்துபோய்விட்டார்.

திருந்தி வாழ முடிவு
அதனால், கள்ளக்காதலை விட்டுவிட்டு திருந்திவாழ முடிவு செய்தார் ஷைலா.. இதனால் அனீஷ் உறவை துண்டித்தார்.. வீடு வரை வருவதை தடுத்தார்.. இது அனீஷூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. போன் செய்தாலும் ஷைலா அதை எடுத்து பேசாமல் தவிர்த்தார். தன் குழந்தைகளின் நலனுக்காக எக்காரணத்துக்காகவும் அனீஷூடன் உறவு கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

சரமாரி குத்து
இந்த சமயத்தில், சம்பவத்தன்று மகளை ஸ்கூலில் விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் ஷைலா.. அப்போது திடீரென வழியை மறித்து கொண்டு நின்ற அனீஷ், தகராறில் ஈடுபட்டார்.. " ஏன் என்னிடம் பேசுவதில்லை.. என்னால் உன்னை மறக்க முடியவில்லை" என்று தகராறு செய்தார்.. ஆனால் ஷைலா, "இனி என்னுடன் பேசவேண்டாம்.. எங்க வீட்டில் நிறைய சிக்கல்.. இனிமேல் தன்னை சந்திக்கவோ, போன் செய்யவோ வேண்டாம்" என்று சொல்லி உள்ளார்... இதனால் இருவருக்குள்ளும் தகராறு அதிகமாகி உள்ளது.

கைது
வாக்குவாதம் முற்றிப்போய், இறுதியில் ஷைலாவின் கழுத்து, மார்பு தோள்பட்டை என 31 இடங்களில் சரமாரியாக ஆத்திரம், ஆவேசத்தில் கத்தியால் குத்தினார்.. இதில் அலறி துடித்து.. ரத்த வெள்ளத்தில் ஷைலா சுருண்டு விழுந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஷைலாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிகொண்டு ஓடினர்.. ஆனால், ஷைலா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். பின்னர், ரத்தக்கறை படிந்த கத்தியுடன் அனீஷ் சுற்றி வந்த நிலையில், அதனை பறிமுதல் செய்த போலீசார், அனீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications