குடும்ப பிரச்சினையில் குழந்தையை அடித்துத் துவைத்த தாய் - கணவருக்கும் செம அடி!
உத்தரபிரதேசம் : உத்தரபிரதேச மாநிலம் பெய்ரேலி நகரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் தான் பெற்ற பச்சிளம் குழந்தையை அடித்து துவைத்து குத்தும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. ஊடகங்களில் இந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பெய்ரேலி நகரில் வசிக்கும் பெண் ஒருவர் கணவர் மீது உள்ள வெறுப்பால் தன்னுடைய குழந்தை என்று பார்க்காமல் குழந்தையை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் கூறும்போது:" தனக்கும் , தனது மனைவிக்கு சில நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதன் காரணமாக என் மீது கோபமாக இருந்த எனது மனைவி எனது குழந்தையை சரமாரியாக தாக்கினார். அதனை தடுக்க சென்ற என்னையும் தாக்கினார்.
இந்த சம்பவத்தை ஆதாரத்துடன் நிருபிக்க எனது வீட்டில் சிசிடிவி காமிராவை பொருத்தினேன். அதில் அவர் குழந்தையை துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளனர். இதனடிப்படையில், போலீசாரிடம் எனது மனைவியின் மீது புகார் அளித்துள்ளேன். இந்த சம்பவம் காரணமாக நான் மிகுந்த மன வருத்ததில் இருக்கிறேன். மேலும் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்க இருக்கிறேன்" என்று கூறினார்.
குழந்தையை குப்புற போட்டு குத்திய அந்த பேய், ஒரு கட்டத்தில் கழுத்தை நெரித்து துன்புறுத்துகிறார். இந்த காட்சிகள் ஏஎன்ஐ நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications