நான் இந்திராவின் பேத்தி... சஞ்சய் காந்தியின் மகள்... டெல்லியில் பரபரப்பை கிளப்பிய பெண்
தாம் இந்திராவின் பேத்தி என்றும் சஞ்சய் காந்தியின் மகள் எனவும் டெல்லியில் 48 வயது பெண் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
டெல்லி: தாம் இந்திரா காந்தியின் பேத்தி; சஞ்சய் காந்தியின் மகள் என டெல்லியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறார் 48 வயது பெண் பிரியா சிங் பால்.
இந்திரா காந்தியின் இளைய மகனான சஞ்சய் காந்திதான் நாட்டின் கருப்பு அத்தியாயமான அவசர நிலை பிரகடனத்துக்கு காரணமாக இருந்தவர். அவசர நிலை காலத்தில் சஞ்சய் காந்தியின் ஆட்டங்களால் தேசம் அதிர்ந்தது.

சஞ்சய் காந்தி
1980-ம் ஆண்டு சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்து போனார். சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி, மகன் வருண் காந்தி ஆகியோர் பாஜகவில் உள்ளனர். மேனகா காந்தி, மத்திய அமைச்சராகவும் இருக்கிறார்.

இந்து சர்க்கார்
அவசரநிலை காலம் தொடர்பாக இந்து சர்க்கார் என்ற திரைப்படத்தை மதுர் பண்டார்கர் இயக்கியுள்ளார். இப்படம் வரும் 28-ந் தேதி வெளியாகிறது.

பிரியாசிங் பால்
இந்நிலையில் இந்து சர்க்கார் படத்தில் என் தந்தை சஞ்சய் காந்தியை பற்றி தவறாக சித்தரித்துள்ளதாக 48 வயதாக பிரியா சிங் பால் என்பவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பரபரப்பை கிளப்பியுள்ளார். தாம் குழந்தையாக இருந்த போதே தத்து கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் பின்னாளில்தான் சஞ்சய் காந்தி மகள் என தெரியவந்தது எனவும் பிரியா சிங் பால் கூறியுள்ளார்.

டிஎன்ஏ பரிசோதனைக்கும் தயார்
அத்துடன் தந்தை சஞ்சய் காந்தியை பற்றி இழிவாக இந்து சர்க்கார் படம் சித்தரித்துள்ளதால் இத்தனை ஆண்டுகாலமாக மறைத்த உண்மையை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கிறார் பிரியா சிங் பால். மேலும் தாம் டிஎன்ஏ பரிசோதனைக்கும் கூட தயார் எனவும் சவால் விடுத்திருக்கிறார் பிரியா சிங் பால்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications