பெங்களூரில் பள்ளி மதிய உணவின் தரம் குறித்து புகார் கொடுத்த பெண் டாக்டர் பலர் முன்பு மானபங்கம்
பெங்களூர்: பெங்களூர் புறநகர் பகுதியில் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் சரியில்லை என்று புகார் தெரிவித்த பெண் டாக்டர் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் முன்பு வைத்து ஆடைகளை கிழித்தெறிந்து மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.

ஐ.டி. நகரமான பெங்களூர் இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. ஆனால் அங்கு நடக்கும் சம்பவங்களை பார்த்தால் அப்படி பாதுகாப்பான நகரமாக இருப்பதாக தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 22 வயது பெண் ஓடும் காரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் மகனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள அரசு சுகாதார மையத்தில் பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவின் தரம் சரியில்லை என்று புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த பஞ்சாயத்து ஆட்கள் டாக்டரிடம் கேட்க அவர் தான் புகார் கொடுக்கவில்லை என்று மறுத்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி 100 பேர் கொண்ட கும்பல் அரசு சுகாதார மையத்திற்குள் புகுந்து அந்த டாக்டரை வெளியே இழுந்து வந்தது. பின்னர் பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் டாக்டரின் ஆடைகளை அவிழ்த்து அவரை மானபங்கப்படுத்தினர்.
இது குறித்து அந்த டாக்டர் நீலமங்களா போலீசாரிடம் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications