பிச்சை எடுத்து மாதம் 1.50 லட்சம் சம்பாதிக்கும் பெண்.. 2 மாடி வீடு.. கோடியில் பிசினஸ்.. ஆச்சரியம்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பெண் ஒருவர் பிச்சை எடுத்தே மாதம் ரூ.1.50 லட்சத்துக்கு மேல் சம்பாதித்து இருப்பதை கேட்டு போலீசார் திகைத்து போனார்கள்.. குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த பெண் நடத்திய விவாதம் தான் பெரிய அளவில் மத்திய பிரதேசத்தில் பேசுபொருளாகி உள்ளது..
கேரளாவில் அண்மைக்காலங்களாக பிச்சைக்கார்கள் குறித்த ரீல்ஸ் வீடியோக்கள், மேக்கிங் வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருகின்றன. அந்த வீடியோக்களை கவனித்தீர்கள் என்றால், பிச்சைக்கார்கள் ஐ போன் வைத்திருப்பார்கள், பெரிய கார் வைத்திருப்பார்கள், பெரிய அளவில் பணக்காரர்கள் போல் இருப்பார்கள்..

ஆனால் பிச்சை போடுபவர்கள் தான் பரிதாப நிலையில் இருப்பார்கள். கேலிக்காக வெளியிடப்பட்ட இந்த வீடியோக்கள் உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும்? உண்மையிலேயே பிச்சை எடுத்தே லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார் ஒரு பெண்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நகரம் அந்த மாநிலத்தின் பாரம்பரிய நகரங்களில் முக்கியமானது. மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால் நகரத்தைவிட அதிக மக்கள் தொகை உள்ள நகரமாகும். இங்கு ஏராளமான பிச்சைக்கார்கள் பிச்சை எடுப்பதையே முழு நேர தொழிலாக செய்து வருகிறார்கள்.. இங்கு சுமார் 7 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.
இதில் மனதை கடினமாக்கும் விஷயம் என்னவென்றால், அவர்களில் 50 சதவீதம் குழந்தைகள் ஆவர்.. இந்தூர் நகரில் முக்கியமான 37 சந்திப்புகளில் (முக்கிய இடங்கள்) அவர்கள் கையேந்தி பிச்சை எடுத்து வருகிறார்கள். ஆண்டுக்கு அவர்கள் ரூ.20 கோடி வரை பிச்சை எடுத்து சம்பாதிப்பதாக அந்த கணக்கெடுப்பு மூலம் தெரியவந்திருக்கிறது. இதையும் சரியாக கணக்கெடுத்துள்ளார்கள் என்பது ஆச்சரியமானதாகும்.
பிச்சைக்கார்கள் இல்லாத நிலையை உருவாக்க விரும்பிய இந்தூர் மாநகராட்சி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஒரு சமூக அமைப்பு இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தூர் மாநகராட்சியுடன் இணைந்து செயல்படும் சமூக அமைப்பை சேர்ந்தவர்கள், பிச்சைக்காரர்களை சந்தித்து மாற்று வாழ்வாதாரத்தை நோக்கி பயணிக்க வைக்க முயற்சித்துள்ளனர்.
அந்த முயற்சியின் ஒரு பகுதியாக சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் சாலையில் பயணித்தனர். அப்படி அண்மையில் ஒரு நாள் சாலையில் பயணிக்கையில், ஒரு பெண் 7 வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவரை அந்த சமூக அமைப்பைச் சேர்ந்த ஊழியர், குழந்தையை வைத்து ஏன் பிச்சை எடுக்கிறாய்? வேலைக்கு செல்லலாமே என்று கேட்டு சத்தம் போட்டுள்ளார்கள். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்தப் பெண், ''பட்டினி கிடப்பதற்கு பதிலாக பிச்சை எடுக்கிறோம். திருடுவதைவிட பிச்சை எடுப்பது மேல்தான்'' என்று தான் பிச்சை எடுப்பதை நியாயப்படுத்தி காரசாரமாக பேசியிருக்கிறார். அவரது பெயர், இந்திராபாய் என்பதும் 7 வயது குழந்தை அவருடைய மகள் என்பதும் அவர்களுக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் கொடுத்து அந்தப் பெண்ணை சமூக அமைப்பினர் கைது செய்ய வைத்தனர். அவரிடம் இருந்து ரூ.19,600-ம், குழந்தையிடம் இருந்து ரூ.600-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான இந்திராபாயை மத்திய பிரதேச போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாரையே திகைக்க வைக்கும் அளவுக்கு தகவல்களை அந்த பெண் கூறியுள்ளார்.. இந்திராபாய்க்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். 2 முதல் 10 வயதுக்கு உள்பட்டவர்கள். அவர்களையும் பிச்சை எடுக்கவைத்து சம்பாதித்து வந்திருக்கிறார். மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும் சந்திப்பில் மூத்த மகளை பிச்சை எடுக்கவிடுவாராம். அங்கு ஒரு பிரசித்திபெற்ற கோவில் உள்ளது. அந்தக் கோவில் சமீபத்தில் பிரம்மாண்டமாக கட்டி திறக்கப்பட்டது. அது கட்டிய பிறகு அவர்களுக்கு பிச்சை வருமானம் இரட்டிப்பு ஆகி உள்ளது.
வெறும் 45 நாட்களில் ரூ.2½ லட்சம் வசூல் ஆகி உள்ளதாம்.. அதாவது ஒரு மாதத்துக்கு சுமார் ரூ.1½ லட்சத்துக்கு மேல் கிடைத்துள்ளாம். இந்திராபாய்க்கு ராஜஸ்தானில் 2 மாடி வீடும், விவசாய நிலமும் இருக்கிறதாம். அவர் கையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் வைத்திருக்கிறார். அவருடைய கணவர், மோட்டார் சைக்கிள் வைத்து இருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 20 கோடி அளவிற்கு மத்திய பிரதேசத்தில் பிச்சைக்கார்கள் சம்பாதிக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications