உ.பி.யில் ஓடும் காரில் இளம்பெண் 4 பேரால் பாலியல் பலாத்காரம்
காசியாபாத்: உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் ஓடும் காரில் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் வழக்கறிஞர் ஒருவரை சந்திக்க காசியாபாத் நீதிமன்றத்திற்கு நேற்று சென்றார். அப்பெண் விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வழக்கறிஞரை சந்தித்து பேசிவிட்டு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தெரிந்த நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அவரை அப்பெண் அங்கிள் என்று அழைத்துள்ளார்.
அவரிடம் அப்பெண் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உடனே அந்த நபர் தான் வேலை வாங்கித் தருவதாகவும், தன்னுடன் காரில் லோனி பகுதிக்கு வருமாறும் கூறியுள்ளார்.
அப்பெண்ணும் காரில் சென்றுள்ளார். லோனி பகுதியில் 3 பேர் காரில் ஏறியுள்ளனர். அதன் பிறகு அந்த 4 பேரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடுமை சுமார் ஒரு மணிநேரமாக நடந்துள்ளது. அதன் பிறகு அவர்கள் அப்பெண்ணை கோவிந்தாபுரம் பகுதியில் காரில் இருந்து தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்.
இதையடுத்து அப்பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த 4 பேரையும் தேடி வருகின்றனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications