36 நாட்கள் கூட்டு பலாத்காரம்.! வயலில் இருந்த பெண்ணை கடத்தி சென்று வெறிச்செயல்.. மிரண்ட ராஜஸ்தான்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ள ஒரு கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்து உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலியல் குற்றங்கள் சமீப ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக சில வட மாநிலங்களில் கூட்டுப் பலாத்கார சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

புகார்

புகார்

ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் 45 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளிக்க வந்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரைப் பார்த்து போலீசாரே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ஹரியானாவில் வயலில் இருந்த தன்னை கும்பல் ஒன்று காரில் ராஜஸ்தானுக்குக் கடத்திச் சென்றதாகவும் அங்கு 36 நாட்கள் கடத்தி வைத்து தன்னை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்து உள்ளார்

கடத்தல்

கடத்தல்

இது தொடர்பாக அந்த பெண் அளித்துள்ள புகாரில், "கடந்த ஜூலை 27ஆம் தேதி தீவனம் சேகரிக்க வயலுக்குச் சென்று இருந்தேன். அப்போது காரில் வந்த சில ஆண்கள் என்னைத் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவர்கள் என்னை ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் அடைத்து வைத்தனர். அங்கு எனக்கு மயக்க மருந்து கொடுத்த அவர்கள், தவறான முறையில் வீடியோ எடுத்து வைத்தனர்.

 36 நாட்கள் கூட்டுப் பலாத்காரம்

36 நாட்கள் கூட்டுப் பலாத்காரம்

சுமார் 36 நாட்கள் அவர்கள் அங்கேயே என்னைப் பிணையக் கைதியாக வைத்து இருந்தனர். அந்தச் சமயத்தில் பல முறை அவர்கள் என்னைக் கூட்டுப் பலாத்காரம் செய்தனர். அவர்கள் அங்கேயே என்னை அடைத்து வைத்து இருந்தனர். என்னால் அங்கிருந்து தப்பித்து வரவும் கூட முடியவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக என்னைக் கடத்தி வைத்து இருந்த அவர்கள் தொடர்ச்சியாகக் கூட்டுப் பலாத்காரம் செய்தார்கள்.

 வீடியோ

வீடியோ

அவர்கள் எனக்கு மயக்க மருந்து கொடுத்து எடுத்த தவறான வீடியோவை வெளியிடக் கூடாது என்றால் பணம் தர வேண்டும் என மிரட்டினர். எனது குடும்பத்தினர் அவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்த பின்னரே அவர்கள் என்னை விடுவித்தனர்" என்று அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முதற்கட்ட விசாரணை இப்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

 அதிகரிக்கும் சம்பவங்கள்

அதிகரிக்கும் சம்பவங்கள்

பொது இடங்களில் இருந்து பெண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. முன்னதாக கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி இதேபோலத் தான் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்த 25 வயது பெண்ணை மூன்று பேர் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்தச் சம்பவம் அப்போது பேசுபொருள் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+