கர்ப்பத்திற்கு காரணம் மாமனார் என சந்தேகித்த மாமியார்.. கோபத்தில் மண்டையை உடைத்து கொலை செய்த மருமகள்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: மாமியாரை இரும்புக் கம்பியால் தாக்கி கர்ப்பிணி மருமகள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக். இவரது மனைவி நிகிதா (29). இவர்கள் இருவரும் அகமதாபாத்தில் தந்தை ராம் நிவாஸ், தாய் ரேகாவுடன் வசித்து வருகிறார்கள். மாமியார், மருமகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவது தெரிய வருகிறது.

நேற்று முன் தினம் தீபக் வேலைக்கு சென்றுவிட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராம் நிவாஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நிகிதா, ரேகா இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது.

நிகிதா

நிகிதா

அப்போது 4 மாத கர்ப்பமாக இருந்த நிகிதாவை பார்த்து ரேகா அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தனது கணவர்தான் காரணம் என திட்டியுள்ளார். மேலும் மாமனாருடன் போய் தவறான உறவை வைத்துள்ளாயே என கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிகிதா கோபமடைந்தார்.

ரத்த வெள்ளம்

ரத்த வெள்ளம்

பின்னர் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நிகிதா, மாமியார் ரேகாவை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த ரேகா இறந்துள்ளார். பின்னர் அவர் மீது தீவைத்து கொளுத்தினார்.

ரேகாவுடன் மோதல்

ரேகாவுடன் மோதல்

இதனிடையே இந்த சண்டையின் போது சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் தீபக்கின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் தனது மகன் தீபக்கிற்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து நிகிதாவிற்கு தீபக் போன் செய்தார். அப்போது அவர் ரேகாவுடன் ஏற்பட்ட மோதல் குறித்து தகவல் அளித்தார்.

வெளிப்புறம்

வெளிப்புறம்

இதில் ரேகா, தன்னை அடித்ததாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார் தீபக். வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடித்தால் யாரும் கதவை திறக்கவில்லை. அப்போது நிகிதாவுக்கு தீபக் போன் செய்தார். தனது அறையின் கதவு வெளிப்புறமாக லாக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துவிட்டார்.

கொலை செய்யவில்லை

கொலை செய்யவில்லை

பின்னர் தீபக் பால்கனி வழியாக தனது வீட்டுக்குள் சென்றுவிட்டார். அப்போது ரேகா ரத்த வெள்ளத்தில் பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்ததை தீபக் கண்டார். இதுகுறித்து நிகிதாவிடம் கேட்டபோது அவர் நான் கொலை செய்யவில்லை என கூறினார். மேலும் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

விசாரணை

விசாரணை

முதலில் தீபக்கிடம் கதவை யாரோ தாழிட்டுவிட்டதாக கூறிய நிலையில் போலீஸாரிடம் எனது உடல்நிலை வலுவற்று இருந்ததால் தன்னால் கதவை திறக்க முடியவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நிகிதாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

கொலையை ஒப்புக் கொண்ட மருமகள்

கொலையை ஒப்புக் கொண்ட மருமகள்

விசாரணையில் நிகிதா தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டார். அவர் கூறுகையில் இரும்பு கம்பியை கொண்டு தலையில் ஓங்கி அடித்தேன். இதில் மண்டை உடைந்தது. பின்னர் ரத்தக் கறைகளை பெட்ஷீட் கொண்டு துடைத்தேன். இதையடுத்து ரேகாவின் உடலை தீ வைத்து எரித்தேன் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+