கணவர், குழந்தை கண் முன்னே மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கொடுமை.. உ.பி.யில் பரிதாபம்
கணவரின் கண்முன்னே மனைவி கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை உத்தரப்பிரதேசத்தில் நடந்தேறியது.
முஸாஃபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் கணவர் கண்முன்னே மனைவியை 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முஸாஃபர்நகரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தையை மருத்துவமனைக்கு கணவனும் (35), மனைவியும் (30) மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். அப்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வழியில் இவர்கள் வந்த வாகனத்தில் கார் ஒன்று வழிமறித்தது. இதனால் தம்பதி அதிர்ச்சி அடைந்தனர்.

தம்பதிக்கு மிரட்டல்
அப்போது காரில் இருந்த ஆயுதங்களுடன் 4 பேர் இறங்கினர். யாரும் எதிர்பாராத வேளையில் அவர்களிடம் இருந்து குழந்தையை பறித்தனர்.

கணவர் மீது தாக்குதல்
இதைத் தொடர்ந்து அவர்களை கணவர் தடுக்க முயன்றார். எனினும் அந்த 4 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை கட்டி போட்டனர். மனைவியை கரும்பு விளைந்துள்ள நிலத்துக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை மிரட்டிய கும்பல்
குழந்தையை கொன்றுவிடுவதாக அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த கும்பல் அவரை கூட்டாக பலாத்காரம் செய்தனர். இதையடுத்து சப்தமிட முயற்சித்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டிவிட்டு அவர்கள் 4 பேரும் தப்பிவிட்டனர்.

விவசாயிகள் உதவி
உதவி செய்யக் கோரி தம்பதியின் சப்தம் கேட்டு அங்கு வந்த சில விவசாயிகள் அவர்களுக்கு உதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications