வரதட்சணை கேட்டு மருமகளை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய மாமனார், மாமியார்
ஜம்ஷெட்பூர்: ஜார்க்கண்டில் வரதட்சணை கேட்டு மருமகளை நிர்வாணமாக்கி அதை வீடியோ எடுத்து மாமனார், மாமியார் மிரட்டியுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரில் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி அவரை வீட்டுக்குள் நடக்கவிட்டு அதை அவரது மாமனார், மாமியார் வீடியோ எடுத்துள்ளனர். உன் பெற்றோரிடம் ரூ.50 லட்சம் வரதட்சணை வாங்கி வராவிட்டால் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து அந்த பெண் இது குறித்து கோவிந்த்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அந்த பெண்ணின் மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வரதட்சணை கேட்டு அவரை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. ஜம்ஷெட்பூரில் அண்மை காலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 பெண்கள் பாதிகப்பட்டுள்ளனர். பாலியல் கொடுமைக்கு ஆளான 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் பைக்கில் வந்த நகை பறிக்கும் ஆசாமிகள் பெண் ஒருவரை கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications