டெல்லியில் பேராசிரியையை முடியை பிடித்து இழுத்து தாக்கிய பேராசிரியர்: பகீர் வீடியோ
டெல்லி: டெல்லியில் பிரபலமான கல்லூரி ஒன்றில் பேராசிரியை ஒருவரை அவருடன் பணிபுரியும் ஆண் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் வேலை பார்த்த பேராசிரியை ஒருவரை அவருடன் பணியாற்றிய ஆண் நபர் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்துள்ளது. ஆனால் வீடியோ தற்போது தான் யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளதாவது,
ஒரு அறையில் ஆண் நபர் பேராசிரியையுடன் பேசிக் கொண்டிருக்கையிலேயே அவரை தனது செல்போனில் புகைப்படம் எடுக்க முயல்கிறார். இதைப் பார்த்த அந்த பெண் புகைப்படம் எடுக்காதீர்கள் என்று கூறி அவரின் செல்போனை தட்டிவிடுகிறார். இதனால் கடுப்பான அந்த நபர் பேராசிரியையை அடித்து, தலை முடியைப் பிடித்து இழுக்கிறார். இதை பார்த்த பிறர் ஓடி வந்து அவர்களை விலக்கிவிடுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பேராசிரியையை தாக்கிய நபரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையே கல்லூரியில் முறையாக நடக்கவில்லை என்று கூறி பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அந்த பேராசிரியை கூறுகையில்,
குப்தா எனப்படும் அந்த நபர் அடிக்கடி என் அறைக்கு வந்து தொல்லை கொடுப்பார். என்னை தகாத வார்த்தைகளால் திட்டுவார், அசிங்கமாக பேசுவார், மிரட்டுவார். சம்பவம் நடந்த அன்றும் அவ்வாறு செய்கையில் என்னை புகைப்படம் எடுக்க முயன்றார். அதை தடுத்த என்னை தாக்கிவிட்டார் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications