கணவரின் சிகிச்சைக்காக புதிதாக பிறந்த குழந்தையை விற்ற தாய்... உ.பி.யில் கொடூரம்
உத்தரப்பிரதேசத்தில் கணவரின் சிகிச்சைக்காக புதிதாக பிறந்த குழந்தையை பெண் ஒருவர் விற்றுள்ளார்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவரின் சிகிச்சைக்கு பணமில்லாததால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை அதன் தாயே விற்பனை செய்த கொடூரம் நடந்துள்ளது.
பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஸ்வரூப் மௌர்யா. இவரது மனைவி சஞ்சு தேவி. இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கட்டட பணியில் கூலி தொழிலாளியாக பணி புரிந்த மௌர்யா மீது கடந்த 3 மாதங்களுக்கு சுவர் ஒன்றுவிழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்க பணமில்லாமல் சஞ்சு தேவி அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தில் வருமானத்தை ஈட்டும் மௌர்யா பணிக்கு செல்ல முடியாததால் அந்த குடும்பம் வறுமையில் வாடியது.
கணவரின் சிகிச்சைக்கு பணத்தேவைக்காக ரூ.42 ஆயிரத்துக்கு அண்மையில் பிறந்த குழந்தையை விற்றுள்ளார் சஞ்சு தேவி. இந்த விவகாரம் உள்ளூர் தொலைகாட்சி சேனல் மூலம் கடந்த திங்கள்கிழமை வெளியே வந்தது.
இதையடுத்து மௌர்யாவுக்கு சிகிச்சை அளிக்கவும், அவரது குழந்தையை விற்பனைக்காக பெற்றுக் கொண்ட தம்பதியை தேடும் பணியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விரைவில் குழந்தையை மீட்டு சஞ்சு தேவியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications