சுவாதி கொலையை போல் டெல்லி அருகே மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம்பெண் குத்திக்கொலை !
டெல்லி: டெல்லி அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை பிங்கி என்ற இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள எம்.ஜி.ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் காலை பிங்கி (22) என்ற இளம்பெண் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜிஜேந்திரா (25) என்ற இளைஞர் பிங்கியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

இதனை, சிசிடிவி கேமிரா காட்சிகளில் பார்த்த ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களும், மெட்ரோ நிலைய பணியாளர்களும் அந்த இடத்துக்கு விரைந்து வந்து, இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் உயிரிழந்தார்.
இதனிடையே , கத்தியால் குத்திய இளைஞரை பொதுமக்கள் பிடித்து, அடித்து உதைத்தனர். படுகாயம் அடைந்த அவரையும் போலீசார் மருத்துவமனை கொண்டுசென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குர்கான் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போன்ற மற்றொரு சம்பவம் குர்கானில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications