பீகாரில் பரபரப்பு... சட்டசபை தேர்தலில் போட்டியில்லை- 'முதல்வர் வேட்பாளர்' நிதிஷ் திடீர் அறிவிப்பு
பாட்னா: பீகாரில் புதிய திருப்பமாக ஆளும் கட்சியின் முதல்வர் வேட்பாளரான நிதிஷ்குமார் தாம் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார்.

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு களத்தில் குதித்துள்ளன. பாரதிய ஜனதாவும் எப்படியும் பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு தேர்தல் பணி ஆற்றி வருகிறது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய திருப்பமாக, சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிடவில்லை; என்னுடைய நேரம் முழுவதையும் பிரசாரத்துக்கே பயன்படுத்த இருக்கிறேன்.. தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்குகிறேன் என முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீகார் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலுவின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி அறிவித்த சிறிது நேரத்திலேயே நிதிஷ்குமாரும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications