உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்... இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை விடவும் இந்தியா பின்தங்கியுள்ளது.
டெல்லி: உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 133வது இடம் கிடைத்துள்ளது. இதில் பாகிஸ்தானை விடவும் இந்தியா பின்தங்கியுள்ளது.
ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு (UNSDSN) என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக 2018ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை நடத்தியது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது
மொத்தம் 156 நாடுகள் இந்த ஆய்வில் பங்கேற்றிருந்தன. ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவகைகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மகிழ்ச்சியான நாடு
இதில் பின்லாந்து நாட்டு மக்கள் தான் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தை தொடர்ந்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.

இந்தியாவுக்கு 133வது இடம்
இந்தப் பட்டியலில் அமெரிக்கா 18-வது இடத்தில் உள்ளது. இதில் இந்தியாவுக்கு 133-வது இடமே கிடைத்துள்ளது.

பின்தங்கிய இந்தியா
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் இந்தியாவுக்கு 122வது இடம் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டுக்கான ஆய்வில், இந்தியா 11 இடங்கள் பின் தங்கி 133-வது இடத்தைப் பெற்றுள்ளது.

முந்திய பாகிஸ்தான்
சார்க் நாடுகளில் பாகிஸ்தான் 75-வது இடத்தை பெற்று முன்னணியில் உள்ளது. பூடான் 97 வது இடத்திலும் நேபாளம் 101 வது இடத்திலும் உள்ளன. வங்க தேசம் 115 வது இடத்திலும், இலங்கை 116 வது இடத்திலும் உள்ளன.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications