ரஜினியின் காலா பட செட்டில் விபத்து- தொழிலாளி மரணம்
சென்னையில் ரஜினியின் காலா படப்பிடிப்பிற்கு செட் அமைத்த போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி மரணமடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் 2 வாரங்கள் கலந்து கொண்டு நடித்தார். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் கடந்த வாரம் சென்னை திரும்பினார்.
அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னை பூந்தமல்லி பழஞ்சூர் பகுதியில் உள்ள பூங்காவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளில் ஈடுபட்டிருந்த மைக்கேல் ராஜேஷ் என்பவர் எதிர்பாராத விதமாக கிழே கிடந்த வயரை மிதித்துவிட்டார். இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான் நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications