5 வீடுகளில் வேலை பார்த்து +2 தேர்வில் 85 சதவீத மார்க் எடுத்த பெங்களூர் ஷாலினி
பெங்களூர்: 5 வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் ஷாலினி பிளஸ் டூ பொதுத் தேர்வில் 84.8 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த ஷாலினி என்ற 17 வயது மாணவி பிளஸ் டூ பொதுத் தேர்வில் 84.8 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் 5 வீடுகளில் பணிப்பெண்ணாக உள்ளார். வீட்டு வேலைகளை செய்து கொண்டே படித்து இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த அவரது தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்க முடியாமல் உள்ளார்.

ஷாலினியின் தாய் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார். ஷாலினி தேர்வு எழுதுவதற்கு முன்பு அவருடைய சகோதரருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து ஷாலினி கூறுகையில்,
கடந்த 7 ஆண்டுகளாக நான் என் தாய்க்கு உதவியாக வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறேன். நான் தேர்வில் 90 முதல் 95 சதவீத மதிப்பெண்கள் பெற நினைத்தேன். ஆனால் என் சகோதரருக்கு உதவியாக மருத்துவமனையில் இருக்க வேண்டியதாகிவிட்டது. எனக்கு மதிப்பெண்களை விட என் சகோதரர் தான் முக்கியம். எலக்ட்ரானிக்ஸ் படித்து என் பெற்றோருக்கு பெருமை தேடிக் கொடுக்க விரும்புகிறேன் என்றார்.
ஷாலினி பற்றி அவர் படித்த எஸ்ஜிபிடிஏ பியூசி கல்லூரி முதல்வர் பிரதாப் நாயுடு கூறுகையில்,
ஷாலினி இத்தனை கஷ்டங்களுக்கு இடையே படித்தாலும் எப்பொழுதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார். அவரது தந்தை மற்றும் சகோதரர் பற்றி எனக்கு செய்தித்தாள்கள் மூலம் தான் தெரிய வந்தது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications