உலகை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்-ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல்,இந்தியாவிலும் எச்சரிக்கை
உலகை உலுக்க தொடங்கியுள்ளது தண்ணீர் பஞ்சம். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் தண்ணீரில்லாத நகரமாகிறது.
Recommended Video

டெல்லி: தண்ணீர்... தண்ணீர்.. உலக நாடுகளை மிகப் பெரிய அளவில் அச்சுறுத்த தொடங்கிவிட்டது.. தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, சோமாலியா, சிரியாவைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான், இந்தியா என உலகின் பல நாடுகள் தண்ணீர் பஞ்சம் எனும் பேராபத்தில் சிக்கிக் கொண்டுள்ளன.
தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் தண்ணீரே இல்லாத வறண்ட பூமியாகப் போகிறது கேப்டவுன்.
உலகிலேயே தண்ணீரே இல்லாத மிகப் பெரிய நகரம் என்ற அவலத்தை சுமக்கப் போகிறது கேப்டவுன். இதனால் தண்ணீரை பயன்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலிலும்
இதேபோன்ற நிலைமைதான் நைஜீரியா, சோமாலியா, சிரியாவிலும். இஸ்ரேலும் கூட தண்ணீர் பஞ்சத்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் தீவிரமாக இருக்கிறது.

குஜராத்திலும்தான்
ஈரானிலும் தண்ணீர் பற்றாக்குறை தலைகாட்டத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் முன்னோடி மாநிலம், வளர்ச்சி மாநிலம் என பில்டப் செய்யப்பட்ட குஜராத்தை காவு வாங்கப் போகிறது தண்ணீர் பஞ்சம்.

நாசமாகும் குஜராத்
குஜராத்தின் உயிர்நாடியாக இருக்கும் நர்மதை அணைக்கான மழைப்பொழிவு என்பது வெகுவாக குறைந்துவிட்டது. 56 ஆண்டுகாலம் கட்டப்பட்டு உருவாக்கப்பட்ட நர்மதை அணையை கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

வேளாண்மை நாசமாகும்
ஆனால் நர்மதை அணையே வறண்டு போகும் நிலையில் இருக்கிறது. இதனால் குஜராத்தின் பல்லாயிரம் கிராமங்களில் குடிக்க கூட நீர் கிடைக்காது என எச்சரிக்கப்பட்டு வருகிறது. குடிக்கவே நீர் இல்லை எனில் வேளாண்துறையே நாசமாகிப் போகும் ஆபத்து இருக்கிறது.
ஆம் உலகம் தண்ணீருக்கான யுத்தத்தை நோக்கி நகருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications