ரூ 3.5 கோடி பரிசுத் தொகையுடன் உலக கபடி லீக் போட்டிகள்- 8 அணிகள் பங்கேற்பு!

ஐபிஎல் பாணியில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் உரிமையாளர்கள் பற்றிய அறிவிப்பையும், அணிகளுக்கான சின்னங்களையும் பஞ்சாப் முதல்வர் சுக்பீர் சிங் பாதல் வெளியிட்டார்.
இப்போட்டித் தொடர் ஆகஸ்டு 9 ஆம் தேதி அன்று துவங்க உள்ளது.
போட்டியில் 8 அணிகள்:
இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இவ்வணிகளில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்கா, யோ யோ ஹனி சிங் ஆகியோருக்கு உரிமையான அணிகளும் அடக்கம்.
அக்ஷய் - ஹனி சிங் அணிகள்:
அக்ஷய் குமாரின் அணியானது "ஸ்பீடி சிங்ஸ்" மற்றும் ஹனியின் அணியானது "யோ யோ டைகர்ஸ்" என்றும் அழைக்கப்படுகின்றன.
மற்ற அணிகளின் உரிமை:
மற்றொரு அணியான வான்கூவர் லயன், குஜ்ரித் சிங் புயுர்வால் உடையது. ஹரியானா போகஸ் ஆர் அண்ட் ஏஏஆர் கம்யூனிகேஷனுடையது. பஞ்சாப் தண்டர் பாலிவுட் நடிகர் ரஜத் பேடியுடையது.
திறமைகள் ஆயிரம்:
"இந்திய மக்களின் பார்வையில் விளையாட்டு என்றால் ஒன்றே ஒன்றுதான் தெரியும் என்று நீங்கள் கூறினாலும், அதையும் தாண்டி நம்முடைய திறமைகளை நீருபிக்க மேலும் பல்வேறு விளையாட்டுகள் உள்ளன" என்று கூறியுள்ளார் ஒரு கபடி வீரர்.
பெண்களுக்கும் உண்டு:
"இந்த கபடிப் போட்டியின் வெற்றியினைத் தொடர்ந்து பெண்களுக்கான சர்வதே கபடிப் போட்டியை ஏற்பாடு செய்யும் எண்ணமும் உள்ளது" என்று கூறியுள்ளார் பாதல்.
4 மாதகால போட்டி:
இந்த போட்டியானது 86 பிரிவுகளாக, 13 சர்வதேச நகரங்களில், 4 மாதங்களுக்கு நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கபடிப் போட்டிக்கான பரிசுத் தொகையாக ரூபாய் 3.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சோனி சிக்ஸ்
இந்த போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையானது இந்தியாவில் சோனி சிக்ஸ் சேனலுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications