உலகின் காஸ்ட்லி மாம்பழம் மியாசாகி.. கிலோ எவ்வளவு தெரியுமா.. தங்கத்தை மறந்துடுங்க! ஒரு மரம் வைங்க
கொல்கத்தா: உலகின் மிகவும் விலை உயர்ந்த மாம்பழம் மியாசாகி மாம்பழம். இது கிலோ ஒன்றுக்கு ரூ 2.75 லட்சம் ஆகும். இந்த மாம்பழம் கண்காட்சி மேற்கு வங்கத்தில் நடைபெற்று வருகிறது.
முக்கனிகளில் மா, பலா, வாழையில் முக்கியத்துவம் மாம்பழத்திற்கே உள்ளது. இந்த பழங்கள் நிறைய வகைகளில் உள்ளன. நமக்கு தெரிந்தது பங்கனபள்ளி, மல்கோவா, அல்போன்ஸா, ரூமானி, நீலம் உள்ளிட்டவைதான்.

இந்த மாம்பழங்கள் கிலோ 100 முதல் 200- க்குள் இருக்கும். கோடை காலங்களில் மாம்பழ சீசன் என்பதால் இந்த சீசனில் பழங்களை வாங்கி ருசிப்பர். சேலத்தில் மாம்பழங்களுக்கு பிரபலம். இந்த ஊரில் இருப்போர் தங்களின் அன்பானவர்களுக்கு மாம்பழங்களை வாங்கி அனுப்புவது வழக்கம்.
அந்த வகையில் கிலோ 1000 விற்கும் மாம்பழங்களை கூட பார்சல் செய்து தனது உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். அந்த வகையில் கிலோ ரூ 2.75 லட்சத்திற்கு ஒரு மாங்காய் வகை இருக்கிறது. ஆம்! அதன் பெயர் மியாசாகி ஆகும். இந்த மாம்பழத்தின் தாயகம் ஜப்பான் என்கிறார்கள். மியாசாகி நகரத்தில் இந்த மாம்பழங்கள் விளைவதற்கான வெயில், மழை, மண் வளம் என அனைத்தும் இருக்கிறது.
இந்த மாங்காய் ஊதா நிறத்தில் இருக்கும். ஒரு பழம் 350 கிராம்எடை இருக்கும். இது உலகில் விலை மதிப்பிலான மாம்பழம் என சொல்லப்படுகிறது. இந்த மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் இருப்பதால் இது கண்களுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். கடந்த முறை மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் தம்பதி தங்களுடைய தோட்டத்தில் 7 மாம்பழங்களை பாதுகாக்க 4 பாதுகாவலர்கள், 6 நாய்களை பணியமர்த்தியுள்ளார்கள்.
இதற்கு காரணங்கள் என்னவென்றால் அந்த 7 மாம்பழங்களும் மியாசாகி எனும் விலை உயர்ந்த மாம்பழங்கள்தான். இந்த பழங்களை கடந்த சீசனின் போதும் யாரோ திருடிச் சென்று விட்டார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது பழுத்தவுடன் சிவப்பு நிறத்தில் மாறிவிடும் என்பதால் இதை சூரியனின் முட்டை என்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில் மாங்காய் திருவிழா நடத்தப்படுகிறது. இங்கு உலகின் விலை மதிப்பிலான மாம்பழமான மியாசாகி மாம்பழங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சிலிகுரி மாவட்டத்தில் இந்த கண்காட்சி நேற்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாம்பழங்களை பொதுமக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். 262 க்கும் மேற்பட்ட மாங்காய்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தங்கத்தை மறந்துவிட்டு இந்த மரங்களை நடலாம் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications