முலாயம்சிங்-லாலு வீட்டு திருமண விழாவில் மோடி
லக்னோ: உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங் பேரன்- ராஷ்ட்டிரிய ஜனதாதள தலைவர் லாலு மகள் இல்லத் திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சாய்பாய் என்னும் சிறிய கிராமம் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது. காரணம், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் பேரன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகள் ராஜலக்ஷ்மிக்கும் நடைபெறும் திருமணத்துக்கு முந்தைய விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டதுதான்.

வருகிற 26ஆம் தேதி டெல்லியில் தேஜ் பிரதாப் - ராஜலஷ்மி திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணம் மற்றும் அதற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முலாயம் சிங் அழைப்பு விடுத்தார்.
கிராமத்திற்கு சென்ற மோடி
திருமணத்திற்கு முன்னதான திலக் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த அழைப்பை ஏற்று நரேந்திர மோடி இன்று காலை நடைபெற்ற திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முலாயம் சிங்கின் சொந்த கிராமமான சாய்பாய்க்குச் சென்றார்.
சிறப்பு அலங்காரம்
மோடியின் வருகையையொட்டி எட்டாவா பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சைபாய் கிராமம் எங்கு பார்த்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
வரவேற்ற முலாயம் - லாலு
பிரதமர் மோடியை லாலுவும், முலாயம்சிங்கும் இணைந்து வரவேற்றனர். மேலும் இரு குடும்ப குழந்தைகளை பிரதமர் மோடி அருகில் அழைத்து அன்பாக பேசினார்.
மோடி வாழ்த்து
விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மணமக்களுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம் இந்த விழாவில் மோடி இருந்தார்.
பாரம்பரிய உணவுகள்
இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேசம், பீகார், குஜராத் மாநில பாரம்பரிய உணவுவகைகள் இடம் பெற்றிருந்தது.
பாலிவுட் நட்சத்திரங்கள்
மேலும் பாலிவுட் நடிகர்கள், பாடகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சி மூலம் அரசியல் விருப்பு, வெறுப்பு குறையும் என்றே கூறப்படுகிறது.
பிப்ரவரி 26ல் திருமணம்
தேஜ் பிரதாப் - ராஜலஷ்மி திருமணம் வரும் 26ஆம் தேதி நடக்கிறது. இந்த திருமண விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பங்கு பெற அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications