மும்பை சந்தன்வாடியில் உள்ள படா கபர்ஸ்தானில் யாகூப் மேமனின் உடல் அடக்கம்
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் உடல் சந்தன்வாடியில் உள்ள படா கபர்ஸ்தானை அடைந்துள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் நாக்பூர் மத்திய சிறையில் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை அவரின் உறவினர்கள் 7 பேர் பெற்றுக் கொண்டனர்.

மேமனின் உடல் விமானம் மூலம் நாக்பூரில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்டது. அவரது உடல் மும்பை மாஹிம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். மேமனின் வீட்டுக்கு வெளியே ஏராளமான மக்கள் கூடியுள்ளனர்.
மேமனின் உடல் அவரது வீட்டில் இருந்து சந்தன்வாடியில் உள்ள படா கபர்ஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் கபர்ஸ்தானுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் மாஹிம் பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் சுமார் 450 பேரை கைது செய்துள்ளனர். மேமனின் உடலையோ அவரது இறுதி ஊர்வலத்தையோ புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது என்று மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications