அதிகாரத்துக்கு எதிராக உண்மையை பேசியிருக்கிறார் சின்ஹா... ப.சிதம்பரம் பாராட்டு!
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சி குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சி குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக பேசிய பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேசியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் நான் பேசியாக வேண்டும் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.
அதில் பிரதமர் மோடியும், மோடியின் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் சேர்ந்து இந்திய பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கிவிட்டனர் எனக் கூறியுள்ளார். மேலும் பாஜக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த அரசுக்கு எதிராக போராட்டம் மற்றும் ரெய்டு நடத்தியிருக்கும் என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

எதிர்க்கட்சியினர் பாராட்டு
நாட்டின் பொருளாதாரம் மூழ்கிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தான் அங்கம் வகிக்கும் பாஜக அரசு குறித்து வெளிப்படையாக யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியிருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
|
அதிகாரத்தை எதிர்த்து
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் யஷ்வந்த் சின்ஹா அதிகாரத்துக்கு எதிராக உண்மையை பேசியிருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரம் மூழ்கிக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
புதுமையான விளையாட்டு
நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து சின்ஹா கூறியிருப்பதை குறிப்பிட்டு டிவிட்டியுள்ள ப.சிதம்பரம், மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்துவது ஒரு புதுமையான விளையாட்டு என தெரிவித்துள்ளார்.
|
அதிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியாது
மேலும் பாஜக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் ரெய்டு நடத்த கோரியிருக்கும் என சின்ஹா கூறியதை குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம் உண்மை வெளிவரும் போது அதிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியாது என டிவிட்டியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications