ராஜ்குமார் மருமகளை தோற்கடித்து எடியூரப்பா வெற்றி
பெங்களூர்: கர்நாடகாவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் ராஜ்குமார் மருமகள் கீதா சிவராஜ்குமாரைவிட முன்னாள் முதல்வர் எடியூரப்பா துவக்கம் முதல் முன்னிலையில் இருந்து வெற்றி வெற்றிபெற்றார்.

அரசியலில் இருந்து விலகியே இருந்த ராஜ்குமார் குடும்பம் முதன்முறையாக கோதாவில் குதித்தது. தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் ராஜ்குமார் மருமகள் கீதா சிவராஜ்குமார் ஷிமோகா தொகுதியில் போட்டியிட்டார். பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பாவுக்கு எதிராக அவர் களமிறக்கப்பட்டார். மொத்த நடிகர் பட்டாளமே ஷிமோகாவில் முகாமிட்டு ராஜ்குமார் மருமகளுக்காக பிரச்சாரம் செய்தது.
இந்நிலையில் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதலே எடியூரப்பா முன்னிலை வகித்தார். கீதா இரண்டாம் இடத்திலிருந்தார். பின்னர் காங்கிரசின் பண்டாரி 2ம் இடத்துக்கு வந்தார். இறுதியில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது












Click it and Unblock the Notifications