ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் எடியூரப்பா!
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகினார். ஆளுநரை நேரில் சந்தித்து கடிதத்தை அளித்தார்.
Recommended Video

பெங்களூரு: பதவியேற்ற 58 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் பதவியில் இருந்து பாஜகவின் எடியூரப்பா விலகினார். கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
கர்நாடகா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

ஆனால், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க கர்நாடக கவர்னர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் போதிய எண்ணிக்கை இல்லாததால், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சட்டசபையில் அறிவித்தார் எடியூரப்பா.
அதைத் தொடர்ந்து முறைப்படி ஆளுநர் வாஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான 15ம் தேதியில் தொடர்ந்து ஐந்து நாட்களில் நான்காவது முறையாக ஆளுநரை சந்தித்தார் எடியூரப்பா.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications