எடியூரப்பாவுக்கு இது புதிதல்ல.... ஆறாவது முறையாக நம்பிக்கை கோருகிறார்!
கர்நாடகா முதல்வரான பாஜகவின் எடியூரப்பா இதுவரை ஐந்து முறை நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரியுள்ளார். இன்று ஆறாவது முறை.
Recommended Video

பெங்களூரு: மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் பி.எஸ். எடியூரப்பா, ஆறாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று கோர உள்ளார்.
கர்நாடகா முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற பாஜகவின் எடியூரப்பா, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை கோர உள்ளார்.

எடியூரப்பா 2007ல் ஏழு நாட்கள் முதல்வராக இருந்தார். பின்னர் 2008ல் 3 ஆண்டுகள், 62 நாட்கள் முதல்வராக இருந்தார். இந்த காலகட்டத்தில் மட்டும் 5 முறை நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் கோரினார்.
2007 நவம்பரில் நடந்த வாக்கெடுப்பின்போது, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவை திரும்பப் பெற்றதால் எடியூரப்பா தோல்வியடைந்தார்.
2008 மே மாதம் நடந்த தேர்தலில் பாஜக வென்று, எடியூரப்பா முதல்வரானார். 2008 ஜூன் மாதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். அப்போது காங்கிரஸ் வெளிநடப்பு செய்ய, எடியூரப்பா வென்றார்.
2010ல் பாஜகவைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி தெரிவிக்க, 2010 அக்டோபரில் மூன்றாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார் எடியூரப்பா. பாஜகவைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் மற்றும் 5 சுயேச்சைகளை தகுதி நீக்கம் செய்தார் அப்போது சபாநாயகராக இருந்து போப்பையா. அதையடுத்து எடியூரப்பா வென்றார்.
இது மோசடி என்று அறிவித்த அப்போதைய ஆளுநர் பரத்வாத், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்தார். அப்போது எடியூரப்பாவுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கடைசியாக 2011 ஜூன் மாதம் ஐந்தாவது முறையாக நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்தார் எடியூரப்பா, மஜத புறக்கணிக்க, காங்கிரஸ் வெளிநடப்பு செய்ய, அப்போது எடியூரப்பா வென்றார்.
இன்று மாலை, ஆறாவது முறையாக மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை எடியூரப்பா கோர உள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications